Actor Mansoor Ali Khan Share His Opinion About Actor Vijay Political Party TVK | Actor Mansoor Ali Khan: நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு விருப்பமில்லை


நடிகர்கள் கட்சித் தொடங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். 
மக்களவைத் தேர்தலில் போட்டி:
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், ” நான் இதற்கு முன்னர் தொடங்கிய கட்சிக்கு தமிழ் தேசிய புலிகள் என பெயரிட்டிருந்தேன். ஆனால் இந்தியா முழுவதும் முழுமைக்கு தமிழ்நாட்டின் முன்னேற்றம் அடைந்ததாகத் தெரியவில்லை. தமிழ் இனத்தில் முன்னேற்றமில்லை. ஒரு தமிழனை பிரதமராக்க முடியவில்லை. இது தொடர்பாக 24ஆம் தேதி நடத்தவுள்ள மாநாட்டில் விரிவாக பேசவுள்ளேன். வரும் மக்களவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவோம். ஆனால் எத்தனைத் தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் என இன்னும் முடிவு செய்யவில்லை.” 
எனக்கு உடன்பாடில்லை:
”நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கே உடன்பாடு இல்லை. என்னை நான் ஒரு நடிகனாகக் கருதவில்லை. கடந்த 1991ஆம் ஆண்டுதான் எனது முதல் படம் வெளியானது. ஆனால் கடந்த 1987, 88 ஆண்டுகளில் மறைந்த ஆதித்தனாரை தமிழர் தலைவர் என அழைத்தற்கு அதனை விமர்சித்து ஒரு பத்திரிகை கடுமையாக எழுதியது. இதனைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது நான் நடனக் கலைஞராக இருந்தேன்.”
”அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெற்ற காவிரி, இலங்கைப் பிரச்னைகளுக்கான போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆளுநர் மாளிகைக்கு எதிராக கிரிக்கெட் விளையாடச் சென்றேன். அப்போது தமிழ் நாட்டில் மைதானங்களே இல்லை. ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல முடியாத காலகட்டம். இதுபோன்ற போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். நடிப்பு என்பது தொழிலாகத்தான் எனக்கு இருந்தது.” 
புதிய கட்சி:
”சமீபகாலமாக நாட்டில் என்ன நடக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு முடிவோடு இறங்கி இருக்கின்றேன், பார்ப்போம். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்துள்ளனர். 15 ஆயிரம் பேருக்கு மேல் பொறுப்புகள் போட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளோம். இந்தியா முழுமைக்குமான உரிமைகளுக்கு குரல் கொடுப்போம். எங்கள் கட்சி தேசிய அளவில் இருக்கும். அதற்காக நாங்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் கிடையாது. தமிழர்களுக்கான உரிமைகள் பல மறுக்கப்படுகின்றது. ஒக்கிப் புயல் வந்தபோது பல நாட்கள் கடல் நீரில் மீனவர்கள் மிதந்தார்கள். ஆனால் ஒரு ஹெலிகாப்ட்டர் கூட மினவர்களை மீட்கச் செல்லவில்லை. நம்மால் அப்படி இருக்க முடியுமா? மீனவர்கள் யாராவது நம்மை மீட்க வருவார்களா என காத்துக்கொண்டு இருந்தனர்.”
”நான் விடப்போவதில்லை. அதிரடி அரசியல், உரியடி பதவிகள். தேசியக் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என்பதற்காக அவருடன் உடனே சேர்ந்து பயணிக்க முடியாது. அவர் தனது கொள்கைகளைச் சொல்லட்டும், பின்னர் பார்க்கலாம். பல்லாவரத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.” 
”தமிழ்நாட்டில் படிப்பறிவு குறைவாக உள்ளது. பார்ப்பதற்கு ஹாலிவுட் பட நடிகர் போல உள்ளார். ஒரு ஜெராக்ஸ் கடை எங்கு உள்ளது எனக் கேட்டால் தெரியவில்லை. இப்படியான நிலையில்தான் தமிழ்நாடு உள்ளது” என மன்சூர் அலிகான் அந்த பேட்டியில் கூறினார். 
 

மேலும் காண

Source link