ABP Nadu Impact Separate Seat Allocated For Vice President In Tindivanam Municipal Council Meeting- TNN

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் (Tindivanam) நகராட்சியின் நகர மன்ற துணைத்தலைவராக ராஜலட்சுமி வெற்றிவேல் என்ற பட்டியலின பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்நிலையில், துணைத்தலைவராக உள்ள ராஜலட்சுமி வெற்றிவேலுக்கு இதுவரை துனைத் தலைவருக்கான தனி இருக்கைகள் வழங்கவில்லை என்றும் நகராட்சி வளர்ச்சி பணிகளில் துணைத்தலைவரை அழைத்து சென்று ஆய்வு செய்வதில்லை எனவும் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் பட்டியலின துணை தலைவர் என்பதால் தனக்குரிய மரியாதையை வழங்கவில்லை என ABP நாடு என குற்றச்சாட்டு வைத்த நிலையில்,  ABP நாடு தொடர்ந்து பல்வேறு நிலையில் செய்திகள் வெளயிட்ட நிலையில் இன்று நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் தனி இருக்கை வழங்கப்பட்டது.

திண்டிவனம் நகர் மன்ற கூட்டத்தில் துணைத் தலைவருக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதுhttps://t.co/wupaoCzH82 | #viluppuram #TamilNadu #tindivanam #ABPImpact pic.twitter.com/438JeAyEFY
— ABP Nadu (@abpnadu) January 30, 2024

 
எனக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தரவில்லை – மாவட்ட ஆட்சியரிடம் மனு 
திண்டிவனம் நகராட்சியின் நகர மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறேன். நான் திண்டிவனம் நகராட்சியில் 22வது வார்டு நகர மன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாக ஒலித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்கள் பணி செய்து வருகிறேன். முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து நகர மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் 04.03.2022 அன்று திண்டிவனம் நகராட்சி நகர மன்ற துணைத் தலைவராக பதவியேற்றேன். பதவியேற்றதிலிருந்து இன்று வரை நகர மன்ற கூட்டத்தில் நகர மன்ற தலைவர் இருக்கைக்கு அருகில் நகர மன்ற துணைத் தலைவராகிய எனக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தரவில்லை.
‘சாதிய தீண்டாமையால் தொடர்ந்து ஒடுக்கு முறைக்கு ஆளாகி உள்ளேன்’ – திண்டிவனம் நகர மன்ற துணைத்தலைவர் பரபரப்பு புகார்
சாதிய தீண்டாமையால் தொடர்ந்து ஒடுக்கு முறைக்கு ஆளாகி உள்ளேன்
நான் இதுகுறித்து நகர மன்ற தலைவர் இடத்திலும் நகராட்சி ஆணையரிடத்திலும் நகர மன்ற கூட்டத்திலும் பலமுறை கோரிக்கை வைத்தேன். நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண் என்பதால் நகரமன்ற தலைவர் இருக்கைக்கு அருகில் நகர மன்றத் துணைத் தலைவராகிய எனக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர மறுக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சியிலும் நகர மன்ற தலைவர் இருக்கைக்கு அருகில் நகர மன்ற துணைத் தலைவர் அமர்ந்து நகர மன்ற கூட்டத்தை வழி நடத்துகிறார்கள். ஆனால் திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் மேற்கண்டவாறு சாதிய தீண்டாமையால் தொடர்ந்து ஒடுக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டு உள்ளேன்.
மறுக்கப்படும் உரிமைகளை பெற்று தாருங்கள் 
மேலும் இதுவரை நகர மன்ற தலைவர் அவர்கள் நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்பதால் வார்டுகளில் நடைபெறும் ஆய்வுகளுக்கு என்னை அழைப்பதே இல்லை. மேலும் திண்டிவனம் நகர வளர்ச்சி பணிகள் குறித்து நகர மன்ற துணைத் தலைவர் ஆகிய என்னிடத்தில் நகர மன்ற உறுப்பினர்களோடு இதுவரை கலந்து ஆலோசித்ததில்லை. நகர மன்ற தலைவர் அவர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி திண்டிவனம் நகரம் சார்ந்த திட்டங்களின் அனைத்து முடிவுகளையும் தன்னாட்சியாக எடுக்கிறார். எனவே ஐயா அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த எனக்கு மறுக்கப்படும் உரிமைகளை பெற்று தரும்படி தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அம்மனுவில் குறிப்பிட்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவிக்கையில், வரும் நகர மன்ற கூட்டத்திலிருந்து இருக்கைகள் ஒதுக்க அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். நகர மன்ற தலைவர் இருக்கைக்கு அருகே துணைத்தலைவர் இருக்கை இருப்பதற்கான அரசின் வழிகாட்டு (rule) நெறிமுறைகள் இல்லை என தெரிவித்தார். மேலும் மற்ற இடங்களில் இருப்பது போல இங்கு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் அவர்களின் கணவர் ரவிச்சந்திரன் கூறுகையில், “எங்கள் இஷ்டத்திற்கு நாங்கள் அங்கு இடம் ஒதுக்க முடியாது, அனைத்திற்கும் தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். எங்களுக்கு எல்லாம் செஞ்சி மஸ்தான் தான் அவர் சொன்னால் தான் நாங்கள் எந்த நடவடிக்கை எடுக்க முடியும். எங்களிடம் எந்த அதிகாரமும் இல்லை” என தெரிவித்தார்.
ABP IMPACT : தனி இருக்கை
இந்த நிலையில் ABP நாடு தொடர்ந்து செய்தி வெளியிட்ட நிலையில் நகர மன்றம் கூட்டம் நடைபெறாமல் இருந்தது, இன்று  திண்டிவனம் நகர மன்றத்தின் சாதாரண கூட்டம் 90 நாட்களுக்கு பிறகு இன்று நகர மன்ற தலைவர் நிர்மலா தலைமையில் நடைபெற்றது. இதில் நகர மன்ற துணைத்தலைவராக ராஜலட்சுமி வெற்றிவேல் அவருக்கு தனி இருக்கை வழங்கப்பட்டது.  பின்னர் மறுக்கப்படும் உரிமைகளை பெற்று தந்த ABP நாடு தொலைக்காட்சிக்கு  நன்றி தெரிவித்தார் நகர் மன்ற துணைத்தலைவர் ராஜலட்சுமி.

Source link