அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால், இந்த முறை அக்கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.

கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

தேர்தலுக்கு இன்னும் 25 நாள்கள் கூட இல்லாத நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது. குஜராத், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கேரளா, லடாக், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகளிலும் ராஜஸ்தானில் 25 தொகுதிகளிலும் உத்தரகாண்டில் 5 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் INDIA கூட்டணி வெற்றுபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் ஆதிக்கத்தை தொடரும் பாஜக:

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் தேர்தலை சந்திக்கும் INDIA கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல, கேரளாவில் 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை INDIA கூட்டணியில் இடம்பெற்றாலும் கேரளாவில் இவை தனித்தனியே போட்டியிடுகின்றன.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேசத்தில் 74 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக மக்களவை தொகுதிகள் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் INDIA கூட்டணி 6 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலும் வெற்ற பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் INDIA கூட்டணி 3 தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லடாக் யூனியல் பிரதேசத்தில் பாஜக வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 10ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. margin of error is +/- 5%)

ABP Cvoter Opinion Poll: தென் மாநிலங்களில் INDIA கூட்டணி மாஸ்.. வடமாநிலங்களில் தொடரும் மோடி மேஜிக்!

ABP CVoter Opinion Poll ABP Cvoter Opinion Poll 2024 ABP Cvoter Survey ABP News Cvoter Surve Lok Sabha Election 2024 Lok Sabha Elections Opinion Poll Lok Sabha Elections Opinion Poll 2024 ஏபிபி சிவோட்டர் ஏபிபி சிவோட்டர் கருத்துக்கணிப்பு கருத்துக்கணிப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள் மக்களவை தேர்தல் 2024 மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்