தனது பொருளாதார வாய்ப்பில் இல்லை என்றாலும் ரஹ்மான் தனது மகள் கதிஜாவின் திருமணத்தை ஆதரித்ததற்கான காரணத்தை பத்திரிகையாளர் கம்பீரன் விளக்கியுள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மான்

1992 ஆம் ஆண்டு மனிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர் ரஹ்மான். தமிழ் சினிமாவில் மூடி சூடா மன்னனாக இருந்து வந்த இளையராஜாவின் சிஷ்யனாக தனது பயணத்தைத் தொடங்கி, பின் யார் சிறந்தவர் என்று ரசிகர்கள் மோதிக்கொள்ளும் அளவிற்கு மக்களை ஆக்கிரமித்தார் ரஹ்மான். தற்போது 2023-ஆம் ஆண்டில் திரையிசையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார் ரஹ்மான். இந்தி, தமிழ் , என கிட்டத்தட்ட 169 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் . ‘சின்ன சின்ன ஆசையில் 90-களின் குழந்தைகள் தொடங்கி ‘பொன்னி நதி பார்க்கணுமே’ என ஓங்கி ஒலித்து gen z கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்கள் வரை அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இசையில் மட்டுமில்லை அன்பு, நகைச்சுவை குறும்புத்தனத்திலும் ரஹ்மான் கொஞ்சம் கெட்டிக்காரர்தான். டைமிங்கில் எதையாவது சொல்லிவிட்டு கலாய்த்து விடுவது . தனது மனைவியாக இருந்தாலும் மேடையில் இந்தியில் பேசினால் தமிழில் பேசுவது என சின்னதாக எதையாவது செய்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துவிடக் கூடியவர்.

“எனது வாழ்நாள் முழுவதும் என் முன்னே அன்பு, வெறுப்பு என இரண்டு விருப்பங்கள் இருந்தன, நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால் இங்கு நிற்கிறேன்” ஆஸ்கர் விருது வெல்லும் போது ரஹ்மான் இந்த உரையை பேசினார். இந்த வார்த்தைக்கும் உண்மையான ஒருவராக தனிப்பட்ட வாழ்க்கையில் இன்றும் இருந்து வருகிறார்.

மகளின் திருமணத்திற்கு பச்சைக்கொடி

ரஹ்மானுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் அவரது இளைய மகளான கதிஜாவுக்கு சமீபத்தில் திருமணமானது. இந்த திருமணம் தொடர்பாக பத்திரிகையாளர் கம்பீரன் சமீபத்தில் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார், தனது குழந்தைகளுக்கு அனைத்து சுதந்திரத்தையும் ரஹ்மான் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு விருப்பப்பட்டதை அவர்கள் செய்துகொள்ளலாம். தனது சொந்த ஆசைகள் அவர் தனது குழந்தைகள் மீது திணிப்பதில்லை. அவரது மகள் கதிஜாவின் திருமணம் அவரது பொருளாதார வாய்ப்புக்கு நிகரானதாக இல்லை என்றாலும் இந்த திருமணத்துக்கு அவர் சம்மதம் தெரிவித்தார். தன்னிடம் சவுண்ட் இஞ்சினியராக பணிபுரிந்தவரைத் தான் தனது மகள் கதிஜாவுக்கு அவர் திருமணம் செய்து வைத்தார்“ என்று அவர் கூறினார்.

ரஹ்மான் இசையமைத்து வரும் படங்கள்

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த், ரஜினிகாந்த் நடித்திருக்கும் லால் சலாம் படத்தில் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் நடித்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்திற்கு ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.