A 6th class student in Madurai attempted a world record in yoga by doing 200 yoga asanas in 29 minutes!


மதுரையில் 6-ம் வகுப்பு மாணவன் யோகாவில் 29 நிமிடத்தில் 200 யோகாசனம் செய்து உலக சாதனை முயற்சி 
 
பள்ளி மாணவ- மாணவிகளிடையே யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் அய்யர் பங்களா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று விளையாட்டு மேம்பாட்டு கழகம் மற்றும் இந்திய யோகா சங்கம் இணைந்து யோகாசனப் போட்டி நடத்தியது. இந்த போட்டியில் மதுரை மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விதவிதமான யோகாசனங்களை செய்து அசத்தினர்.

மதுரையில் 6ஆம் வகுப்பு மாணவன் யோகாவில் 29 நிமிடத்தில் 200 யோகாசனம் செய்து உலக சாதனை முயற்சி.பள்ளி மாணவ- மாணவிகளிடையே யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் அய்யர் பங்களா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது குறிப்பிடதக்கது.#yoga @abpnadu @abplive pic.twitter.com/iyhi4ZGTbX
— arunchinna (@arunreporter92) February 10, 2024

இதில் மதுரையை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவனான தியானேஷ்  யோகாசன போட்டியில் கலந்து கொண்டு உலக சாதனை  முயற்சியில் ஈடுபட்டார்.  மாணவன் தியானேஷ் 29 நிமிடத்தில் பத்மாசனம் , வீராசனம் ,  யோகமுத்ரா ஆசனம், உத்தீதபத்மாசனம் , அர்த்த சங்கரா ஆசனம் ,பாதஹஸ்தாசனம் பிறையாசனம், சானுசீராசனம் பஸ்திமோத்தா சனம், உத்தானபாத ஆசனம், நவாசனம் என 200 ஆசனங்களை செய்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளார். மாணவரின் இந்த சாதனை முயற்சியை கண்ட பார்வையாளர்கள்  அனைவரும் கைதட்டி உற்சாகமூட்டியதோடு, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துகொண்டனர்.

 
இதுகுறித்து மாணவர் தியானேஷ் பேசும்போது..,”5 வயதில் இருந்தே யோகா, ஜிம்னாஸ்டிக் போன்ற பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், யோகாவில் சாதிக்க வேண்டும் என  இந்த முயற்சி மேற்கொண்ட தாகவும் கூறினார். மேலும் அடுத்தகட்ட முயற்சியாக சக்கராசனத்தில் அதிக நேரம் நின்று சாதனை முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
இது குறித்து மாணவனின் யோகா ஆசிரியர் கூறியபோது, யோகாவில் இதுவரை ஒரு மணி நேரத்தில் 90 முதல் 120 ஆசனங்களே செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று உலக சாதனை முயற்சியாக 29 நிமிடத்தில் 200 ஆசனங்கள் செய்து மாணவர் தியானேஷ் அசத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் காண

Source link