தமிழ்நாடு:
சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார்; திருநெல்வேலி, கன்னியாகுமரி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்
பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் கிடையாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் அறிமுகப்படுத்தி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி
இடஒதுக்கீடு பற்றி பேச அன்புமணிக்கு அருகதை இல்லை – சி.வி.சண்முகம் தாக்கு
இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் முக்கிய வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல்; தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு
கடந்த ஆண்டை விட தமிழ்நாட்டின் மின் தேவை அதிகரிப்பு; சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை
ஈரோடு எம்பி கணேச மூர்த்தி திடீர் தற்கொலை முயற்சி
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லும் திமுக எதற்காக ஆட்சியில் இருக்கிறது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
பிரதமர் மோடி குறித்து இழிவான கருத்தை தெரிவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார்
தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக இடையேதான் போட்டி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியா:
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என I.N.D.I.A கூட்டணி அறிவித்துள்ளது.
வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் 12 அடையாள ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பதவி விலகக் கோரும் பாஜகவுக்கு பதிலடி; அமலாக்கத்துறை விசாரணைக்கு நடுவே முதல் உத்தரவு பிறப்பித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
மேகதாது விவகாரம்: தமிழ்நாடு அரசு எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தில் மனு போடுகிறார்கள் என முன்னாள் பிரதமர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் இமாச்சலப்பிரதேசத்தில் போட்டியிடுகிறார் நடிகை கங்கனா ரனாவத்.
ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என மத்திய அமைச்சர் வி.கே.சிங் அறிவிப்பு.
ஹோலி பண்டிகை புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா பாஜகவில் இணைந்தார்.
உலகம்:
பிரேசில் நாட்டில் கடும் புயல்: இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக தகவல்.
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் 300 பேர் இரண்டு வாரங்களுக்கு பின் விடுவிப்பு.
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.
ரஷ்யாவில் பயங்கரவாத தாக்குதல்: 133 ஆக உயர்ந்த உயிரிழப்பு
133 பேர் உயிரிழந்த மாஸ்கோ தாக்குதல் தீவிரவாதிகள் உக்ரைனுக்கு தப்பி ஓட முயன்றனர் – ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு
விளையாட்டு:
ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது பெங்களூரு அணி.
ஐபிஎல் 2024: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஐபிஎல் 2024: நேற்றைய முதல் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஐபிஎல்லில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தான் விளையாடிய முதல் போட்டிகளில் அரைசதம் விளாசி அசத்தி இருக்கிறார் சஞ்சு சாம்சன்.
Published at : 25 Mar 2024 07:03 AM (IST)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண