இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பும் ஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் சாமிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க உள்ளதாக வரவேற்பு குழு கமிட்டி தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் சாமி

ஆன்மீக பூமி என சர்வதேசங்களிலும் அழைக்கப்படும் இந்தியாவில் உள்ள மிகத் தொன்மையான மடங்களில் முக்கியத்துவம் மிக்கது காஞ்சி சங்கரமடம். காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ சங்கர மடம். இதன் பிடாதிபதியாக ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சாமிகள் இருந்து வருகிறார். ஆதிசங்கரால் நிறுவப்பட்ட இந்த மடத்தின் 70-வது பீடாதிபதியாக இருப்பவர் சங்கராச்சாரியார் என பொதுவாக அழைக்கப்படும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி விஜய யாத்திரையை துவங்கிய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், இந்தியா முழுவதும் உள்ள சங்கர மடங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் முக்கிய கோவில்களுக்கு யாத்திரை சென்றார் . பல்வேறு இடங்களில் முகாமிட்டு, யாத்திரையின் போது செய்ய வேண்டிய பூஜை உள்ளிட்ட அனைத்து கடமைகளையும் அவர் செவ்வனே நிறைவேற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியகின .

விஜய யாத்திரை

விஜய யாத்திரை கிளம்பி ராமேஸ்வரம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். காசியில் உலக நன்மைக்காக லக்க்ஷ மோதக கணபதி யாகம், அதிருத்ர மகா யாகம், சண்டியாகம் ஆகியவை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனா சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை திருக்கையால் நடத்தி வைத்துவிட்டு தற்போது திருப்பதியில் உள்ளார். இதனையடுத்து வரும் 20ம் தேதி மாலை காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்துக்கு திரும்ப உள்ளார். அவரை வரவேற்க ஸ்ரீ காஞ்சி சங்கர மட நகர வரவேற்பு கமிட்டி சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

"காஞ்சிபுரம் திரும்பும் சங்கராச்சாரியார் "

அவ்வகையில், காஞ்சிபுரம் நகர புறநகர் பகுதியான சர்வதீர்த்த குளம் அருகே வருகை புரியும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பல்வேறு திருக்கோயில்கள் சார்பாக பிரசாதம் மற்றும் பூரண கும்பம் அளிக்கப்பட்டு, அங்கிருந்து ரத வாகனத்தில் சிவ வாத்தியங்கள் , மேளதாளம் , வேத பாராயணம், நாட்டுப்புறக் கலைஞர்களின் நடனம் என பல்வேறு நிகழ்வுகளுடன் ஊர்வலமாக சங்கர மடம் வருகை புரிகிறார். அங்குள்ள ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சுவாமிகள் அனுஷ்டானத்தில் பூஜையில் மேற்கொள்ள உள்ளார். அதைத் தொடர்ந்து சங்கரமடத்தில் சந்திர மௌலிஸ்வரர் பூஜை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாக வரவேற்பு கமிட்டி குழு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது ஸ்ரீ சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேசன் மற்றும் வரவேற்பு குழு கமிட்டி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்