ஐ.பி.எல் 2024:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
தல தோனி – தளபதி விராட்:
ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி இது என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எப்படி ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ அதைப்போலவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. சென்னை அணியை பொறுத்தவரை தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி களத்தில் இறங்கினால் போதும் ரசிகர்கள் எழுப்பம் சத்தம் விண்ணை பொளக்கும்.
அதேபோல் தான் விராட் கோலி களம் இறங்கும் போதும் ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள். அதேநேரம் ( 2010, 2011, 2018, 2021, 2023) ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பெற்றுக்கொடுத்தவர் எம்.எஸ்.தோனி. ஆனால், என்ன தான் உலக அளவில் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக திகழ்ந்தாலும் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் கோலி இதுவரை ஒரு கூட ஐ.பி.எல் கோப்பையை தங்கள் அணிக்காக வென்று உச்சி முகர்ந்ததில்லை. இது ரசிகர்களிடம் 16 வருடங்களாக சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு பக்கம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிண்டல்களுக்கு ஆளானாலும் மறுபுறம் என்றாவது ஒரு நாள் எங்கள் பக்கம் காற்று அடிக்கும் அன்றைக்கு நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று காத்திருக்கின்றனர் பெங்களூரு ரசிகர்கள்.
ஆர்.சி.பி பெயர் மாற்றம்?
ರಿಷಬ್ ಶೆಟ್ಟಿ ಎನ್ ಹೇಳ್ತಿದ್ದಾರೆ ಅರ್ಥ ಆಯ್ತಾ? Understood what Rishabh Shetty is trying to say? You’ll find out at RCB Unbox. Buy your tickets now. 🎟️@shetty_rishab #RCBUnbox #PlayBold #ArthaAytha #ನಮ್ಮRCB pic.twitter.com/sSrbf5HFmd
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 13, 2024
இந்நிலையில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சமூகவலைதள பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த வீடியோவில், காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி நடித்திருக்கிறார். அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என 3 காளைகள் நிற்க, அதில் கடைசியாக இருக்கும் பெங்களூரு என்ற காளையை மட்டும் “இது வேண்டாம் கூட்டி போ” என ரிஷப் சொல்லி, ரசிகர்களை பார்த்து என்ன சொல்றேன்னு புரியுதா..? என கன்னடத்தில் கேட்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் சூழலில் ரசிகர்கள் இதனை வைத்து அணியின் பெயர் மாற்றப்படுகிறதா என்று விவாதித்து வருகின்றனர். RCB unboxing என்ற பெயரில் இது குறித்தான விளக்கம் வரும் 19-ஆம் வெளிவரும் என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
மேலும் காண