Watch Video: ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானத்தில் இருந்து பராசூட் மூலம் பைலட் உயிர் தப்பியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானில் விமான விபத்து:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விடுதி வளாகம் அருகே இந்தியாவின் உள்நாட்டு போர் விமானமான தேஜஸ் விமானம் இன்றைய பயிற்சியின்போது திடீரென்று விபத்தில் சிக்கியது. பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்து நடப்பதற்கு முன்னதாக, பைலட் தேஜஸ் விமானத்தில் இருந்து பராசூட் மூலம் பறந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பைலட் உயிர் தப்பியது எப்படி?
Last moments of LCA Tejas crash today in Jaisalmer of Rajasthan when pilots ejected safely captured by a local resident on video. pic.twitter.com/dR9E2cwZjq
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) March 12, 2024
இந்த நிலையில், பைலட் எப்படி விபத்தில் இருந்து தப்பினார் போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தேஜஸ் விமானம் தரையை நோக்கி வேகமாக பறந்து வருகிறது. அப்போது, விபத்து நடப்பதற்கு சில மணி நிமிடங்களுக்கு முன்பு, விமானத்தில் உள்ள eject பொத்தானை அழுத்தி பராசூட் உதவியுடன் பைலட் பறந்து செல்கிறார். அதன்பின், பைலட் பராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கியது போன்று வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேஜஸ் விமானம்:
தேஜாஸ் போர் விமானமானது பல்வேறு சூழல்களிலும் செயல்படக் கூடிய வகையில் , இந்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. மோசமான வானிலை சூழலில் கூட திறம்பட செயல்படும் என்றும் கூறப்படுகிறது.
வான் பாதுகாப்பு, கடல்சார் உளவு உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலும், எதிரிகளை தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், தேஜஸ் விமான வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தேஜஸ் விமானம் ஒற்றை எஞ்சின் கொண்ட மல்டிரோல் லைட் பேர் விமானம். இந்த போர் விமானங்களில் ஒருவர் அல்லது இரண்டு பேர் இயக்கும் வகையில் உள்ளது. இன்று விபத்தில் சிக்கிய தேஜஸ் விமானம் ஒரு பைலட் மூலம் இயக்கக்கூடிய ஒன்று.
பொதுவாக, போர் விமானங்களில் பிரச்னை ஏற்பட்டால் விமானத்தில் உள்ள பராசூட் மூலம் பறந்து விபத்தில் இருந்து தப்பிக்கும் வசதி உள்ளது. இதைபோல தான், இன்று விபத்துக்குள்ளான தேஜஸ் விமானத்தில் இருக்கிறது. இதை பயன்படுத்தி தான் பைலட் இன்று உயிர்தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண