பிரான்ஸ் கல்வித்துறை அமைச்சர் கேப்ரியல் அட்டலை, நாட்டின் பிரதமராக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நியமித்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளரான கேப்ரியல் அட்டல் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.