நாட்டில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ராஞ்சியில் கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் லோகர்தகா மாவட்டம் அமைந்துள்ளது.
பாலியல் வன்கொடுமை:
லோகர்தகா மாவட்டத்தில் அமைந்துள்ளது பக்டூ காவல் நிலையம். இந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் பிறந்த நாள் விழா ஒன்று நடந்துள்ளது. இந்த விழாவில் 17 வயதுக்குட்பட்ட 3 சிறுமிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு 3 பேரும் தங்களது வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அதில் ஒரு சிறுமி தனது வீட்டிற்கு திரும்ப மற்ற இரண்டு சிறுமிகளும் தங்களுக்கு தெரிந்த ஒரு நபரின் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்த இரண்டு சிறுமிகளும் அங்கு தங்கியிருந்ததை சிலர் நோட்டமிட்டுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் திடீரென ஒரு கும்பல் ஒன்று அந்த சிறுமிகள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்தது. இதனால், அந்த சிறுமிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, அந்த சிறுமிகளை அந்த கும்பல் அந்த இரண்டு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தது.
அந்த சிறுமிகள் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த பக்டூ காவல் நிலையத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தனர். அவர்களை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த சிறுமிகளிடம் நடந்ததை கேட்டு விசாரித்தனர். பின்னர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
11 பேர் கொண்ட கும்பல்:
இந்த சம்பவம் நடந்ததையறிந்த கிராம மக்கள் பக்டூ காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி வேண்டும் என்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமிகளை 11 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததும், அந்த 11 பேரும் பக்டூ, பூசத் மற்றும் கங்குபர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர், போலீசார் அந்த 11 பேரையும் கைது செய்தது. பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்ற சிறுமிகளை 11 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: கரூரில் கொல்லப்பட்ட மதுரை ராமர் பாண்டியன் உடல் 7 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு
மேலும் படிக்க: தமிழகத்தில் போக்சோ வழக்கில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை
மேலும் காண