Bigg Boss Season 7 Tamil Vichitra Salary Details Reveals

Bigg Boss Vichitra: விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 97 நாட்களை கடந்துள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி,  அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது. 

 
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய ஒரு வாரமே உள்ள நிலையில், இறுதிக்கட்டத்தில் விசித்ரா, மாயா, அர்ச்சனா, பூர்ணிமா, விஷ்ணு, தினேஷ், மணி, விஜய் வர்மா உள்ளிட்டோர் இருந்தனர். இதில் நேற்று முன் தினம் பூர்ணிமா ரூ.16 லட்சம் பணப்பெட்டியுடன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று, விசித்ரா வெளியேற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் தற்போது பிக்பாஸ் வீட்டில் மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் விஜய் வர்மா உள்ளனர். இவர்களில் விஷ்ணு ஏற்கெனவே பைனலுக்கு சென்றுள்ளார். 
 
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விசித்ரா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில்  தற்போது வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் 95 நாட்கள் இருந்த விசித்ரா வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. நாள் ஒன்றிற்கு விசித்ரா 40 ஆயிரம் சம்பளம் வாங்கியதாக தகவல் வந்துள்ளது. அதன்படி பார்த்தால் 95 நாட்களில் அவரின் சம்பளம் கிட்டத்தட்ட ரூ.35 லட்சத்திற்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர்களில் ஒருவராக விசித்ரா இருப்பார் என்று கூறப்படுகிறது. 

Source link