kanchipuram book fair 2024 Starts today In Kanchipuram 9th february to 19 th february 2024 at kanchipuram collector office ground TNN


காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் இரண்டாவது மாபெரும் புத்தக திருவிழா- 2024 09.02.2024 முதல்  19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் புத்தக திருவிழா 2024 ( kanchipuram book fair 2024 )
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ/ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (bapasi) இணைந்து, நடத்தும் இரண்டாவது மாபெரும் புத்தக திருவிழா-2024 தொடங்கப்படவுள்ளது. இப்புத்தக திருவிழா 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறுகின்றது. புத்தக திருவிழா நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் 50,000 தலைப்புகளில் பல இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டவுள்ளன. இப்புத்தக கண்காட்சி அறிவு பசிக்கு மாபெரும் விருந்தாகும், இப்புத்தக கண்காட்சியில் பல எழுத்தாளர்கள் படைப்புகளும் இடம் பெறுகின்றன.
கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் ?
மேலும் புத்தக திருவிழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முதல் நாள் துவக்க விழாவினை தொடர்ந்து, 2-வது நாள் ஆயிஷா இரா.நடராஜன் மற்றும் .எம்.பி.நாதன் அவர்களின் சொற்பொழிவுகளும், 3-வது நாள் சியாமளா ரமேஷ்பாபு அவர்களின் சொற்பொழிவும், சூப்பர் சிங்கர் மற்றும் இசைப் பள்ளி குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், 4-வது நாள் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவும், பட்டிமன்றம் ராஜா அவர்களின் தலைமையில் பட்டிமன்றமும், 5-வது நாள் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் திரைக்கலைஞர் பொன்வண்ணன் ஆகியோரின் சொற்பொழிவுகளும், 6-வது நாள் விழாவில் இயக்குநர் அஜயன் பாலா மற்றும்  பர்வீன் சுல்தானா ஆகியோரின் சொற்பொழிவுகளும், 7-வது நாள் விழாவில் கோபிநாத் அவர்களின் நீயா நானா நிகழ்ச்சியும், ஈரோடு மகேஷ் அவர்களின் பட்டிமன்றம் நிகழ்ச்சியும், 8-வது நாள் விழாவில் கு.சிவராமன் மற்றும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் ஆகியோரின் சொற்பொழிவுகளும், 9-வது நாள் விழாவில் மோகனசுந்தரம் மற்றும் பாவலர் அறிவுமதி ஆகியோரின் சொற்பொழிவுகளும்,  10-வது நாள் விழாவில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் சொற்பொழிவு மற்றும் கலக்கப்போவது யாரு குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சிகளும், 11-வது நாள் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் விழா என 11 நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன.
புத்தகத் திருவிழா செயல்படும் நேரம் ?
மேலும் புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை 10 மணி முதல் பிற்பகல் 03 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகளும், பிற்பகல் 03 மணி முதல் மாலை 04 மணி வரை பள்ளி, மாணவ/மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 04 மணி முதல் மாலை 05 மணி வரை கல்லூரி மாணவ/மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 05 மணி முதல் 06 மணி வரை நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், மாலை 06 மணி முதல் இரவு 09 மணி வரை சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. மாபெரும் இப்புத்தக திருவிழா பொதுமக்கள் மற்றும் மாணவ /மாணவியர்களிடையே வாசிப்பு திறனை உருவாக்கிட 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளன. புத்தக ஆர்வலர்கள் மாணவ/ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் காண

Source link