12th Fail: ஐ.பி.எஸ். மனோஜ்குமார் ஷர்மா, அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐ.ஆர்.எஸ். இருவரும் தான் உண்மையான ஹீரோக்கள் என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
12த் ஃபெயில் படம்:
இந்தியில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு தியேட்டரில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி வெளியான படம் ‘12த் ஃபெயில் (12th Fail)’. சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை விது வினோத் சோப்ரா இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், அன்ஷுமன் புஷ்கர், அனந்த் விஜய் ஜோஷி, கீதா அகர்வால், ஹரிஷ் கண்ணா, சரிதா ஜோஷி, விகாஸ் திவ்யாகீர்த்தி என பலரும் நடித்துள்ளனர். ஐ.பி.எஸ். அதிகாரியான மனோஜ் குமார் ஷர்மாவின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகிய இந்தப் படம் பரவலான கவனம் பெற்றது. இந்த படத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
12த் ஃபெயில் பட நிஜ தம்பதிகளுடன் ஆனந்த் மஹிந்திரா:
இந்த நிலையில், ’12த் ஃபெயில்’ படத்தின் உண்மையான தம்பதிகளை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சந்தித்திருக்கிறார். ஐ.பி.எஸ். அதிகாரி மனோஜ் குமார் சர்மா மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐ.ஆர்.எஸ். ஆகியோரை சந்தித்து ஆட்டோகிராஃப் வாங்கினார்.
They were shy when I requested them for their autographs, which I am proudly holding. But they are the true real-life heroes Manoj Kumar Sharma, IPS and his wife Shraddha Joshi, IRS. The extraordinary couple on whose lives the movie #12thFail is based. Over lunch today, I… pic.twitter.com/VJ6xPmcimB
— anand mahindra (@anandmahindra) February 7, 2024
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”நான் அவர்களிடம் ஆட்டோகிராஃப் கேட்டபோது, அவர்கள் வெட்கப்பட்டனர். ஐ.பி.எஸ். மனோஜ் குமார் ஷர்மா, அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐ.ஆர்.எஸ்., இருவரும் உண்மையான ஹீரோக்கள். இன்று அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டேன். 12த் ஃபெயில் படம் அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதை தெரிந்து கொண்டேன்.
நேர்மையான வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இந்த தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்களை மக்கள் பின்பற்றினால், இந்தியா மிக விரைவில் வல்லரசாகும். இவர்கள் தான் இந்த நாட்டில் உண்மையான பிரபலங்கள். அவர்களிடம் பெற்ற ஆட்டோகிராஃபை எனது பரம்பரை சொத்தாக கருதுகிறேன்” என்று ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டிருந்தார்.
மேலும் காண