TR BALU: காரசார விவாதம்..! எம்.பி., ஆக இருக்கவே தகுதியில்லாத அமைச்சர்


TR BALU DMK-BJP: மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவே தகுதியில்லாத நபர் என, திமுக எம்.பி., டி.ஆர். பாலு ஆவேசமாக பேசியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் பேசிய டி.ஆர். பாலு,  தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டினார். அப்போது, மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் அடிக்கடி குறுக்கிட்டு பேசினார். இதனால் ஆவேசமடைந்த டி.ஆர். பாலு,  நித்யானந்த ராய் எம்.பி., ஆக இருக்கவே தகுதியற்ற்வர், அவரை அவையிலிருந்து வெளியேற்றுங்கள் என ஆவேசமாக பேசினார். இதனால், திமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால், மக்களவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.
 
 
 

மேலும் காண

Source link