ஸ்பெயினில் பேரறிஞர் அண்ணாவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை..


பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயினில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உடன் இருந்தனர்.

தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக – அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் நினைவுநாள்!இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் #Anna சொன்ன கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும்… pic.twitter.com/QPU2So44fC
— M.K.Stalin (@mkstalin) February 3, 2024

இது தொடர்பான முதலமைச்சர் ஸ்டாலினின் எக்ஸ் பதிவில், “ தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக – அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள்! இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணித் துணிக கருமம்! என்றென்றும்_அண்ணா” என பதிவிட்டுள்ளார்

மேலும் காண

Source link