15 years Vishnu Vishal shared pround memories of rajinikhanth in vennila kabadi kulu movie


Vishnu Vishal: தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் விஷ்ணு விஷால், தனது சினிமா வாழ்க்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். 
விஷ்ணு விஷால்:
விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமான வெண்ணிலா கபடி குழு படம் வெளியாகி, இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இப்படம் வெற்றி பெற்ற பிறகு எண்ணற்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். ஆரம்பக் காலத்தில் குள்ளநரிக்கூட்டம், நீர்ப் பறவை, முண்டாசுப்பட்டி ஆகிய படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன. தொடர்ந்து ஜீவா படத்தின் மூலம் இவர் பெருமளவு ரசிகர்களைக் கவர்ந்தார்.  
மேலும், இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படங்கள் இவரது ஹீரோ அந்தஸ்தை உயர்த்தின. இதனை அடுத்து, இவர் கதாநாயகனாக நடித்த ராட்சசன் படம் இவரது கேரியரில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.  இதனை அடுத்து கட்டா குஸ்தி படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த விஷ்ணு விஷால், தற்போது இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளது.
விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி பதிவு:
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் விஷ்ணு விஷால், தனது சினிமா வாழ்க்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்துடன், 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். அன்றும் இன்றும் என புகைப்படங்களுடன் நினைவைப் பகிர்ந்து இருக்கிறார். 
அதில், வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அப்போது, வெண்ணிலா கபடிக் குழு படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷாலை சந்தித்திருக்கிறார்.  ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் விஷ்ணு விஷாலை சந்தித்த ரஜினி, படத்தின் கிளைமாக்ஸ் தன்னை வியப்படைய செய்ததாகவும், அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். 

மேலும், ஒரு நடிகரின் ரசிகராக அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. தனது முதல் படத்தை பாராட்டி, தனது பெயரை உச்சரித்ததே மிகவும் பெருமையாக இருந்தது என்று அப்போது விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார்.  இந்நிகழ்வின் செய்தித்தாள் புகைப்படத்தையும், லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஒன்றாக இருக்கும் போஸ்டரையும் பதிவிட்டு, “இத்தனை அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி. எனது பயணம் நீண்ட தூரம் இருக்கிறது” என்று விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டிருக்கிறார். 

மேலும் காண

Source link