actress vichitra boycott anda ka kasam-shoot | Vichitra – Dinesh: பிக்பாஸ் வீடு தாண்டியும் தொடரும் விசித்ரா


விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அண்டாகாகசம் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த  நடிகை விசித்ரா, ஷூட்டிங்கில் சண்டையிட்டுக் கொண்டு பாதியிலேயே சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
விஜய் தொலைக்காட்சியில் “அண்டாகாகசம் 2” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முழுவதும் எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியான இதில் பங்கேற்க அனன்யா, அக்‌ஷயா, விஷ்ணு, விசித்ரா, ரவீனா மற்றும் தினேஷ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசித்ரா, தினேஷ் உட்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் வந்துள்ளனர். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்துக்காக விசித்ரா கோபித்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறியதாகத் தகவல்கள் வெளியாகின. 
 
இது தொடர்பாக நிகழ்ச்சியில் இருந்தவர்கள் பேசியபோது, ”பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சி குறித்த அனைத்தும் அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி எல்லாரும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தனர். ஆனால், ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு விசித்ரா, தனது டீமுடன் தினேஷ் விளையாட வேண்டும் எனக் கேட்டார். 
 
இதனால் விசித்ராவின் விருப்பத்தை தினேஷிடம் கூறி சம்மதம் கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது விசித்ராவுடன் சேர்ந்து விளையாட தனக்கு விருப்பம் இல்லை என தினேஷ் கூறி விட்டார். அதாவது விசித்ராவுடன் விளையாட தனக்கு ஆட்சேபனை இல்லை என்ற தினேஷ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி விசித்ரா காயத்தை ஏற்படுத்தி விட்டார் என்றார். மேலும் விசித்ராவின் அந்தப் பேச்சால் தானும் தனது குடும்பமும் ரசிகர்களும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், விசித்ராவுடன் இணைந்து தான் கேம் விளையாடுவது சரியாக இருக்காது என்றும் தினேஷ் கூறியுள்ளார். 
 
ஆனாலும் தினேஷின் இந்த பதிலை ஏற்காத விசித்ரா, தான் ஒரு சீனியர் ஆர்டிஸ்ட் என்றும், தனது கருத்துக்கு மதிப்பு தரவில்லை என்றும் கூறி கோபப்பட்டுள்ளார். மேலும், நிகழ்ச்சியின் யூனிட் கெஞ்சாத குறையாக பேசியும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கோபத்துடன் விசித்ரா வெளியேறியுள்ளார். திடீரென நிகழ்ச்சியில் இருந்து விசித்ரா வெளியேறியதால் வேறு வழியில்லாமல் ரவீனாவுடன் வந்த ஒருவரை நடிக்க வைத்துள்ளனர். 

மேலும் காண

Source link