Oscar 2024 Nomination The Killer Of The Flower Moon Oppenheimer Check Full List

Oppenheimer,the killer of the flower moon, பார்பி உள்ளிட்ட திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் (The 96th Academy Awards) விருதிற்கு பரிந்துறைக்கபட்டுள்ளது. 
வரும் மார்ச் மாதம் ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற உள்ள நிலையில், ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது விழா- 2024
96-வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் மாதம் 10-ம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெற உள்ளது. இதற்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஓபன்ஹைமர், பார்பி உள்ளிட்ட படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஓபன்ஹைமர் (oppenheimer)
கிறிஸ்டோஃபர் நோலன் (Christopher Nolan) இயக்கி, கிலியன் மர்ஃபி, எமிலி ப்ளண்ட், ராபர்ட் டெளனி ஜூனியர், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பியூ ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். லுட்விக் கோரான்ஸன் இசையமைத்திருந்தார். புலிட்சர் விருது பெற்ற ‘American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer’ எனும் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தின் அரசியலை பேசும் படமாக அமைந்திருக்கிறது. பெரும் வரவேற்பை பெற்றது.
ஓபன்ஹைமர் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

 

Source link