நொடியில் சிதைந்த கார்… பறிபோன call of duty வடிவமைப்பாளரின் உயிர்… பதைபதைக்க வைக்கும் காட்சி…

நொடியில் சிதைந்த கார்… பறிபோன call of duty வடிவமைப்பாளரின் உயிர்… பதைபதைக்க வைக்கும் காட்சி…
call of duty வீடியோ கேம் கிரியேட்டரான வின்ஸ் ஜாம்பிள்ளா, கோரமான கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
55 வயதான Vince Zampella, தெற்கு கலிஃபோர்னியாவில், தனது ஃபெர்ராரி காரில் பயணித்துக்கொண்டிருந்தார். மலைப்பகுதியின் குகையில் இருந்து அதிவேகமாக அவரது சிவப்பு நிற ஃபெர்ராரி கார் வந்த‍து.
அப்போது, சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி, கார் சுக்கு நூறாக சிதைந்த‍து. இதை அங்கு இருந்தவர்கள் வீடியோவில் படம் பிடித்துள்ளனர்.

இந்த விபத்தில், Vince Zampella உடன் பயணித்த ஒருவர் உயிருடன் வெளியேறிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மதுபோதை அல்லது போதைமருந்து பயன்படுத்தியிருந்த‍தால் விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் விபத்துக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

call of duty, vince zampella, ferrari, accident, car crash, california news,