நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. முல்லன்பூரில் உள்ள மகாராஜ யாத்வேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பே ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில்தான் இருந்தது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் அணியும் 6 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. இரண்டாவது இடத்தில் உள்ள கொல்கத்தாவின் நிகர ரன் ரேட் +1.528, மூன்றாவது இடத்தில் உள்ள சென்னையின் நிகர ரன் ரேட் +0.666 மற்றும் நான்காவது இடத்தில் உள்ள லக்னோவின் நிகர ரன் ரேட் +0.436.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐந்தாவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் ஆறாவது இடத்திலும் காணப்படுகின்றன. பின்னர் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் தலா 4 புள்ளிகளுடன் முறையே ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளன. இது தவிர ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி 10வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) போட்டிக்கு பிறகு அப்டேட் செய்யப்பட்ட புள்ளிகள் அட்டவணை, ஆரஞ்சு கேப் மற்றும் பர்பிள் கேப் வைத்திருப்பவர்களை கீழே பார்க்கலாம்.
தரவரிசை
அணிகள்
போட்டி
வெற்றி
தோல்வி
புள்ளிகள்
ரன் ரேட்
1
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)
6
5
1
10
+0.767
2
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
4
3
1
6
+1.528
3
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)
5
3
2
6
+0.666
4
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)
5
3
2
6
+0.436
5
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
5
3
2
6
+0.344
6
குஜராத் டைட்டன்ஸ் (GT)
6
3
3
6
-0.637
7
மும்பை இந்தியன்ஸ் (MI)
5
2
3
4
-0.073
8
பஞ்சாப் கிங்ஸ் (PBKS)
6
2
4
4
-0.218
9
டெல்லி கேபிடல்ஸ் (DC)
6
2
4
4
-0.975
10
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
6
1
5
2
-1.124
ஆரஞ்சு கேப்:
1. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) – 6 போட்டிகள் (319 ரன்கள்)
2. ரியான் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 6 போட்டிகள் (284 ரன்கள்)
3. சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 6 போட்டிகள் (264 ரன்கள்)
4. சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்) – 6 போட்டிகள் (255 ரன்கள்)
5. சாய் சுதர்ஷன் (குஜராத் டைட்டன்ஸ்) – 6 போட்டிகள் (226 ரன்கள்)
பர்பிள் கேப்:
1. யுஸ்வேந்திர சாஹல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 6 போட்டிகள் (11 விக்கெட்டுகள், எகானமி: 7.40)
2. ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்): 5 போட்டிகள் (10 விக்கெட்டுகள், எகானமி: 5.95)
3. அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப் கிங்ஸ்) – 6 போட்டிகள் (9 விக்கெட்டுகள், எகானமி: 9.24)
4. ககிசோ ரபாடா (பஞ்சாப் கிங்ஸ்) – 6 போட்டிகள் (9 விக்கெட்டுகள், எகானமி: 7.95)
5. கலீல் அகமது (டெல்லி கேபிடல்ஸ்) – 6 போட்டிகள் (9 விக்கெட்டுகள், எகானமி: 8.79)
மேலும் காண