Lok Sabha Election: ஓட்டு போடுங்க ஹோட்டல்ல ஆஃபர்ல சாப்பிடுங்க..! செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அதிரடி..!

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்களித்துவிட்டு, கையில் மை இருந்தால் மறுநாள் ஓட்டல்களில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

100 சதவீத வாக்குப்பதிவு:

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று தங்கள் பகுதியில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்று 100 % வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏப்ரல் 19 அன்று வாக்காளர்கள் வாக்கு அளித்து விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20-ம் தேதி சாப்பிட செல்லும் போது காண்பித்தால், 5% விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் இம்மாவட்டத்தில் 100% வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வாக்கு செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதற்காக, மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள இந்த ஊக்குவிக்கும் முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Source link