குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி (Cooku with Comali) நிகழ்ச்சியில் 5 ஆவது சீசனின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. இந்த சீசனை மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் செஃப் தாமு ஆகிய இருவரும் இணைந்து தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.
கடந்த நான்கு சீசன்களில் இந்த நிகழ்ச்சியில் தாமுவுடன் நடுவராக இருந்து வந்த செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகக் கூறி ரசிகர்களை முன்னதாக அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் தனக்கு கொடுத்த அன்புக்கு நன்றி தெரிவித்த வெங்கடேஷ் பட், நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து செஃப் தாமுவும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். பின் அடுத்த சில நாட்களில் இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.
பின் வெங்கடேஷ் பட் தாமு தனது பதிவை நீக்கியது குறித்து எக்ஸ் தளத்தில் இப்படி பதிவிட்டார் “ பூனை கண் மூடிற்றால் உலகம் இருண்டு விடுமோ.. இணையத்தில் பதிவை நீக்கினால் உறைத்தது மறையுமோ.. இதனால் உமக்கு கிடைப்பது எதுவாயினும்.. மகிழ்ச்சி என்றும் எனக்கே…சொல் தவறினாலும் நட்பு மாறாது..” என மறைமுகமாகத் தாக்கி பதிவிட்டார்.
இன்ஸ்டாகிராம் வீடியோ
இந்நிலையில், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகியதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? அடுத்ததாக வெங்கடேஷ் பட் என்ன செய்ய போகிறார்? முதலில் தாமு விலகுவதாக பதிவிட்டுபின் நீக்கியது ஏன்? இப்படி பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருந்து வருகின்றன.
இப்படியான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஆரம்பிக்கலாமா’ என்று கேப்ஷன் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வெங்கடேஷ் பட். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் அலப்பறை கெளப்புறோம் பாடலில் வரும் “பட்டத்த மறிக்க நூறு பேரு” என்று இந்த பாடலில் வரும் வரி யாரை குறிப்பிடுகிறது, வெங்கடேஷ் பட் பூடகமாக என்ன சொல்ல வருகிறார் என்று ரசிகர்கள் குழம்பி உள்ளார்கள். மேலும் அவர் புதியாக கேட்டரிங் கல்லூரி ஒன்றை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் பதிவில் அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளையும் பகிர்ந்து வருகிறார்க.
மேலும் காண