சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

விஜயா, மீனாவையும் முத்துவையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முத்து சரி என்று கூறி விட்டு அண்ணாமலையையும் உடன் வர சொல்கிறார். ”ஆமா பா நீ 30 வருஷத்துக்கு மேல இவங்க கிட்ட தண்டனைய அனுபவிச்சிட்ட. வா போலாம்” என்கிறார். ”நீங்க ஏன்பா போறிங்க” என மனோஜ் கேட்கிறார். அதற்கு அண்ணாமலை ”விஜயா என்னைக்குமே இவன தான் புள்ளையா பார்த்ததே இல்லை. உங்க புள்ள, உங்க புள்ளனு தான் சொல்லுவா? என் புள்ள கூப்டா நான் போய் தானே ஆகனும் ” என சொல்கிறார்.

”இப்போ நீ முத்துவ வெளியே போக சொன்னினா நானும் போயிடுவேன். இப்போ நான் போகணுமா? இருக்கணுமா?” என அண்ணாமலை கேட்கிறார். ”இங்க என்னைக்கு என் பேச்சுக்கு மரியாதை இருந்து இருக்கு எதாவது பண்ணுங்க” என சொல்லி விட்டு விஜயா செல்கிறார். அண்ணாமலை விஜயாவை சமாதானம் செய்து சாப்பிட வைக்கிறார். ”ரெண்டு பெரிய வீட்டு மருமகள நான் தான் கூட்டிக்கிட்டு வந்தேன்” என விஜயா சொல்கிறார்.

”ரோகிணி அப்பா வந்து இருந்தா அவரு கிட்டயும் நம்ம மரியாதை போயிருக்கும்” என விஜயா சொல்கிறார். பின் ”ஆமா ரோகிணி உன் அப்பா எங்க அவரு ஏன் இன்னும் வர்ல” என கேட்கிறார் விஜயா. ”நிஜமாவே அவரு வரேனு சொன்னாரா இல்ல நீ சும்மா சொன்னியா?” என விஜயா கேட்கிறார். உடனே ரோகிணி ஓடிப்போய் வாந்தி எடுக்கிறார். ”ஏங்க எல்லாம் நல்ல விஷயம் தாங்க நம்ம வீட்டுக்கு வாரிசு வரப்போகுது” என விஜயா சொல்கிறார். ரோகிணி, ”ஆண்டி அந்த மாதிரி எதுவும்” என எதையோ சொல்ல வாயெடுக்கிறார். ”எனக்கு தெரியாதா? ”என விஜயா சொல்கிறார். பின் ரோகிணி மனோஜிக்கு விஜயா இனிப்பு ஊட்டி விடுகிறார்.

உடனே அண்ணாமலை ரோகிணியை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்று கற்பத்தை உறுதி செய்ய சொல்கிறார். ”நான் சொன்னத தாங்க டாக்டரும் சொல்ல போறாரு” என விஜயா சொல்கிறார். மனோஜும், ரோகிணியும் விழித்துக் கொண்டு நிற்கின்றனர். பின் மனோஜ் ரோகிணியை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்கிறார். பின் விஜயா, மீனாவை பார்த்து அவங்க அவங்க எண்ணத்துக்கு ஏத்த மாதிரி தான் எல்லாம் நடக்குது என சொல்லி விட்டு செல்கிறார். இதனால் மீனா வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.