9 reasons to be at the ABP Network Ideas of India Summit know more details here


ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2024 உச்சி மாநாடு, வரும் பிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெறுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில்  சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில், யார் எல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சுயெல்லா பிரேவர்மேன் மற்றும் டாக்டர் சசி தரூர்:
200 ஆண்டுகால பிரிட்டனின் எழுச்சிக்கு இந்தியாவில் கொள்ளையடித்த பணமே காரணம் என்கிறார் காங்கிரஸ் எம்பி சசி தரூர். இந்தியாவிற்கு பிரிட்டன் தார்மீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடன்பட்டுள்ளது என அவர் வாதிடுகிறார். ஆனால், அதற்கு நேர்மாறான வாதத்தை முன்வைக்கிறார் பிரிட்டன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன். 
பிரிட்டிஷ் பேரரசு காலனிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளையும் சட்டத்தின் ஆட்சியையும் கொண்டு வந்துள்ளதாக அவர் கூறுகிறார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பெருமைமிக்க குழந்தை என்று தன்னை அழைத்து கொள்ளும் அவர், கடந்த காலத்திற்கு மன்னிப்பு கேட்க மறுக்கிறார். 
ஏபிபி நெட்வொர்க்கின் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ மாநாட்டில் தேசியவாதம், பன்முக கலாச்சாரம், மோசமான போர்கள், எல்லைகளை மூடுவது போன்ற பல்வேறு தலைப்புகளில் இவர்கள் இருவரும் விவாதம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்திய – அமெரிக்க எழுத்தாளர் பத்மா லக்ஷ்மி (மாடல், செயல்பாட்டாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்)
எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்பாளரான பத்மா லக்ஷ்மி, டாப் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். நியூயார்க் டைம்ஸின் பெஸ்ட் செல்லிங் ஆத்தர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மாடலாகவும் எண்டோமெட்ரியோசிஸ் அறக்கட்டளையின் இணை நிறுவனராகவும் உள்ளார். பெண்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கான ACLU கலை தூதராகவும் உள்ளார். ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்திற்கான நல்லெண்ணத் தூதராகவும் உள்ளார். அமெரிக்க சமையல் மரபுகள் பற்றிய அமெரிக்கர்களின் புரிதலை பன்முகப்படுத்துவதை தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டுள்ளார். 
ஏபிபி நெட்வொர்க்கின் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ மாநாட்டில் பல்வேறு உணவு வகைகள் பற்றி பேச உள்ளார்.
சிற்ப கலைஞர் சுபோத் குப்தா:
ஏபிபி நெட்வொர்க்கின் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ மாநாட்டில் இந்தியாவின் புகழ்பெற்ற சிற்ப கலைஞரான சுபோத், தனது தொடக்க கால நினைவுகளை பகிர்ந்து கொள்ள உள்ளார்.
சப்யசாசி நிறுவனர் சப்யசாசி:
உலகளவில் மேட் இன் இந்தியா பிராண்ட் விரிவடைய காரணமாக இருந்தவர் சப்யசாசி. ஏபிபி நெட்வொர்க்கின் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு உலகில் மனித கைகளின் கலைத்திறன் குறித்து பேச உள்ளார்.
அரசியல் திறனாய்வாளர் பேராசிரியர். சுனில் கில்னானி:
இந்தியா என்பதை ஒரு கருத்தாக்கம் என நிறுவியவர். இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றம் குறித்து ஏபிபி நெட்வொர்க்கின் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ மாநாட்டில் பேச உள்ளார்.
நடிகை கரீனா கபூர் கான்:
இயற்கையான நடிப்பு திறன், பிரமிக்கவைக்கும் அழகுக்கு பெயர் போன கரீனா கபூர் கான், நான்காம் தலைமுறை நடிகை ஆவார். குறைபாடற்ற நடிப்பு திறன், தனது பலம் என்ன என்பது குறித்து ஏபிபி நெட்வொர்க்கின் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ மாநாட்டில் பேச உள்ளார்.
நிதி ஆணையத்தின் தலைவர் டாக்டர். அரவிந்த் பனகாரியா:
இந்தியப் பொருளாதாரத்துடனான தனது வாழ்நாள் அனுபவம், நாம் எங்கே இருக்கிறோம், எங்கு செல்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவாக எடுத்துரைக்க உள்ளார்.
 

மேலும் காண

Source link