7 Am Headlines today 2024 March th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

தமிழகத்தில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் – ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ச்சி 
தமிழ்நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா உற்சாக கொண்டாட்டம் – சிவலாலயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் 
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – 6,244 பணியிடங்களுக்கு 20,37,094 பேர் விண்ணப்பம் 
நீலகிரியில் காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு – உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் 
குற்றவாளிகள் சம்பவம் நடந்த எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் தான் ஆஜராக வேண்டும் – வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என உயர்நீதிமன்றம் கருத்து 
பெண் பயணிகள் பாதுகாப்புக்காக பிரத்யேக உதவி எண் தொடக்கம் – சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு 
மாணவர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் 
தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் செயலி அறிமுகம் – ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தியதால் சர்வர் முடக்கம் 
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்தி விழா – சிறப்பு அழைப்பாளராக துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கார் பங்கேற்பு  
அரசுக்கு எதிரான கருத்துகளை கூறியதாக கல்வி செயற்பாட்டாளர் ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் – பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் 
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக சார்பில் மார்ச் 12 ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு 
தமிழ்நாட்டில் மார்ச் 14 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் விசிக கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது திமுக – மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு 
ஹோலி பண்டிகையை முன்னிட்டு சென்னை -நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு 

இந்தியா: 

மகளிர் தின ஸ்பெஷலாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு 
கர்நாடகாவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவு 
பெங்களூருவில் கடும் குடிநீர் பற்றாக்குறை – தண்ணீரை வீணாக்கினால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளுக்கான காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – வயநாட்டில் ராகுல் காந்தி போட்டி 
டெல்லி சாலையில் தொழுகை செய்த இஸ்லாமியர்களை எட்டி உதைத்த காவல் அதிகாரி சஸ்பெண்ட் 
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு 
மக்களவை உறுப்பினராக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் சுதா மூர்த்தி நியமனம் 
பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜவுளி வியாபாரி கைது 
இந்தியாவில் முதல் முறையாக பிரத்யேக ஓடிடி தளத்தை அறிமுகம் செய்த கேரள அரசு – சினிமா ரசிகர்கள் வரவேற்பு 

உலகம்: 

சீனாவுடன் மோதலை விட போட்டியை தான் விரும்புகிறோம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 
பேஸ்புக் தான் அமெரிக்க மக்களின் உண்மையான எதிரி என முன்னாள் அதிபர் டிரம்ப் பேச்சு 
கனடாவில் கத்திக்குத்து தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு 
காசாவில் தலை விரித்தாடும் பஞ்சம் – ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 20 குழந்தைகள் உயிரிழப்பு 

விளையாட்டு: 

 இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்துள்ளது – ரோகித் சர்மா, சுப்மன் கில் சதம் 
பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி உத்திரப்பிரதேச வாரியர்ஸ் அணி வெற்றி 
இன்டியன்வெல்ஸ்  ஓபன் டென்னிஸ் போட்டி; முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் தோல்வி 
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இயக்குநர் பதவியில் இருந்து ஹாமில்டன் மசகட்சா ராஜினாமா

Published at : 09 Mar 2024 07:07 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link