7 Am Headlines today 2024 March 18th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பாஜகவை தோற்கடிப்பதுதான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு.
யாருக்கு சலுகை தராமல் பெற்ற தேர்தல் நிதியை வெளிப்படையாக வெளியிட்டுள்ளோம் – திமுக.
வாக்குப்பதிவு, எண்ணிக்கை இடையே 45 நாள் இடைவெளி சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஆலோசனை.
அதிமுக – பாமக கூட்டணி இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்.
தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நாளை முதல் விருப்ப மனு பெறப்படுகிறது.
இலங்கை கடற்படையால் கைது செய்த தமிழ்நாடு மீனவர்கள் 21 பேருக்கு மார்ச் 27 வரை நீதிமன்ற காவல்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட உள்ள தொகுதிகள் இன்று இறுதி செய்யப்படுகின்றன.
சென்னையில் உரிமம் பெற்ற 2,125 துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க போலீஸ் ஆணை.
பிரதமர் மோடி இன்று கோவையில் ரோட் ஷோ எனப்படும் வாகன பேரணியில் ஈடுபட உள்ளார்.

இந்தியா:

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம்.
பீகாரில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என ஐக்கிய ஜனதாதள தலைவர் காலித் அன்வன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெரும் பணக்காரர்கள்தான் மோடி அரசை இயக்குகிறார்கள் – ராகுல் காந்தி.
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வழக்கை அவசர வழக்காக இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. 

உலகம்:

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அதிபயங்கர காட்டுத்தீ – 11 கிராம மக்களை பாதுகாப்பாக வெளியேற்றிய நிர்வாகம்.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழப்பு.
காசா மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் இதுவரை 18 ஹமாஸ் அமைப்பினர் உயிரிழந்ததாக தகவல்.
மக்கள் ஆணையை திருடிய தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – இம்ரான் கான்.
அமெரிக்க அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை.
முஸ்லிம் மீதான வெறுப்புணர்வுக்கு எதிராக ஐநாவில் பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றம் – இந்தியா புறக்கணிப்பு.
இந்திய பெருங்கடல் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்படும் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை

விளையாட்டு: 

மகளிர் பிரிமியர் லீக் சாம்பியன் மகுடத்தை டெல்லியை வீழ்த்தி ஆர்.சி.பி. அணி கைப்பற்றியது.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு விராட் கோலி வீடியோ கால் மூலம் வாழ்த்து. 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, இந்த சீசனில் கேப்டன் கூல் எம்.எஸ்.தோனி கேப்டனாக இருக்க மாட்டார் என தெரிவித்தார். 
வாய்ப்புகளை வழங்கிய மகேந்திர சிங் தோனிக்கு எனது வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என அஸ்வின் தெரிவித்தார்.

Published at : 18 Mar 2024 07:11 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link