12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட ஆட்சியராக ஆர்.பிருந்தா தேவியும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும், திருப்பத்தூர் ஆட்சியராக தர்பகராஜூம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.