15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா (மாநிலங்களவை) உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்திரபிரதேசம் – 10, பீகார், மஹாராஷ்டிரா தலா 6, மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 5 உள்பட மொத்தம் 56 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.