விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலகுறைவினால் உயிரிழப்பு..!


விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான ந.  புகழேந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் திடீரென மேடையிலையே மயங்கி விழுந்தார். இதனையடுத்து எம்.எல்.ஏ புகழேந்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 

மேலும் காண

Source link