வாழ்க்கையை மாற்றி போட்ட பாலின மாற்று அறுவை சிகிச்சை! குழந்தையை பெற்றெடுத்த ஆண்…வாவ்!

நாட்டில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய விழிப்புணர்வு பலரிடம் இல்லை. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் காதலிப்பதும், பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உறவில் இணைவதும் தற்போது இயல்பானதாகியுள்ளது. இருப்பினும், சமுதாயத்தில் இதைப் பற்றிய சரியான புரிந்துணர்வை ஏற்படுத்த மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் பல விதமாக முயற்சி செய்து வருகின்றனர்.

பாலின மாற்று அறுவை சிகிச்சை:

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் ஒருவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு குழந்தை பெற்றிருக்கிறார்.  மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லலிதா சால்வே (36). 1988ஆம் ஆண்டு பிறந்த இவர், 2010ஆம் ஆண்டு மகாராஷ்டிரா காவல்துறையில் பெண் போலீசாக பணியில் சேர்ந்தார்.

2013ஆம் ஆண்டு இவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு ஆண்களுக்குரிய தன்மைகளை அதிகமானதாக உணர்ந்துள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் அணுகி கேட்டறிந்தார்.  இவருக்கு நடந்த பரிசோதனையில் ஆண்களுக்கான எக்ஸ் மற்றும் ஓய் குரோமோசோம் இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து, மருத்துவர்கள் பாலின அறுவை சிகிச்சை செய்ய லலிதாவை அறிவுறுத்தினர். கடந்த 2017ஆம் ஆண்டு செட்படம்பர் மாதம் பாலின மாற்று  அறுவை சிகிச்சை செய்ய மாநில காவல் தலையகத்தில் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால்,  காவல் தலைமையகம் அவருக்கு அனுமதி வழங்கவில்லை.

ஆண் குழந்தை:

இதனை அடுத்து, தனக்கு பாலின அறுவை சிகிச்சை செய்ய விடுப்பு கோரி மும்பை நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மும்பை நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தது.   இதனை அடுத்து, மும்பை கோட்டை பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ச் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

2018 – 2020ஆம் ஆண்டுக்குள் மூன்று அறுவை சிகிச்சைகள் இவருக்கு செய்யப்பட்டது.  அனைத்து அறுவை சிகிச்சைகளும் முடிந்த பிறகு, பிப்ரவரி 16, 2019ல் சீமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்பாக, அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது பெயரை லலித்குமார் சால்வே என்று மாற்றிக் கொண்டார்.

”எண்ணற்ற போராட்டங்கள்"

2019ல் சீமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவர், ஜனவரி 15ஆம் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  பாலின மாற்ற அறுவை சிகிச்சைகள் குறித்து 30க்கு மேற்பட்டவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லலித்குமார் சால்வே, "பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எனது பயணம் போராட்டங்கள் நிறைந்தவை.  இந்த நேரத்தில், எனக்கு ஆதரவாக பலர் இருப்பது எனக்கு பாக்கியம். என் மனைவி சீமா குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். தற்போது நான் தந்தையாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

மேலும் படிக்க

Election Commission : ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த ரூ.10,000 கோடி செலவா? தேர்தல் ஆணையம் போட்ட கணக்கு.. தலையே சுத்துதே

Source link