மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்.. தலைவர்கள் இரங்கல் ..


சட்ட நிபுணரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் (வயது 95) காலமானார். டெல்லியில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை அவர் காலமானார்.

Eminent jurist Senior Advocate Fali S Nariman (95) passes away. pic.twitter.com/voMmFoS28k
— Live Law (@LiveLawIndia) February 21, 2024

 நாரிமன் மும்பை  உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். 22 ஆண்டுகள் பயிற்சி செய்த பிறகு, அவர் 1971 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஃபாலி நாரிமனுக்கு 1991 இல் பத்ம பூஷன் மற்றும் 2007 இல் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

The passing away of eminent jurist, senior advocate, and a fierce votary of Constitutional Civil Liberties, Fali S Nariman is a huge loss to the legal system. A Padma Vibhushan recipient, his unwavering commitment to his principles remained steadfast and admirable. My deepest… pic.twitter.com/hyiZ0nDWBw
— Mallikarjun Kharge (@kharge) February 21, 2024


இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “ புகழ்பெற்ற சட்ட வல்லுநர், மூத்த வழக்கறிஞர் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் சிவில் உரிமைகளின் தீவிர வாக்காளருமான ஃபாலி எஸ் நாரிமன் அவர்களின் மறைவு சட்ட அமைப்புக்கு மிகப்பெரிய இழப்பாகும். பத்ம விபூஷன் பெற்றவர், அவரது கொள்கைகளில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உறுதியானதாகவும் போற்றத்தக்கதாகவும் இருந்தது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளார். 

My heartfelt condolences go out to the family and friends of Fali Nariman, whose demise leaves a profound void in the legal community. His contributions have not only shaped landmark cases, but have also inspired generations of jurists to uphold the sanctity of our Constitution… pic.twitter.com/K9Uv90csPz
— Rahul Gandhi (@RahulGandhi) February 21, 2024

அதேபோல் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தள பதிவில், “ ஃபாலி நாரிமனின் மறைவு சட்டச் சமூகத்தில் ஒரு ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பங்களிப்புகள் நமது அரசியலமைப்பு மற்றும் சிவில் உரிமைகளின் புனிதத்தன்மையை நிலைநிறுத்துவதற்கு பல தலைமுறை சட்ட வல்லுநர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. அவர் இல்லாவிட்டாலும் நீதி மற்றும் நியாயத்திற்கான அவரது அர்ப்பணிப்பு நம்மை வழிநடத்தட்டும்” என தெரிவித்துள்ளார். 
 

மேலும் காண

Source link