திருவண்ணாமலை மாவட்டத்தில் “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கேரி பேக்குகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் வகையில் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

“மீண்டும் மஞ்சப்பை”

மஞ்சப்பை விருதுகள் 2023-2024 விண்ணப்பிக்க “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் 2022-2023 நிதியாண்டுக்கான சட்டப்பேரவையில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இது வழங்கப்படும். இது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிபை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்தமாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிகவளாகங்களுக்கு
இந்த விருது வழங்கப்படும்.

பரிசு தொகை விவரம்

முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். இந்த அறிவிப்பின் படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள் சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாத மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாகத் திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிகவளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கௌரவிக்க முன் வந்துள்ளது.

இதுகுறித்து விரிவான தகவல்

விண்ணப்பபடிவங்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலக இணையதளம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் , தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கிடைக்கும். விண்ணப்பப்படிவத்தில் தனிநபர், நிறுவனத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: 01.05.2024 என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.