தமிழ்நாடு சட்டப் பேரவை நேற்று அதாவது பிப்ரவரி 12ஆம் தேதியில் இருந்து ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதம் வரும் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதேபோல் வரும் 19ஆம் தேதி 2024 -2025ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இப்படியான நிலையில், நாளை அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி, சட்டப்பேரவையில் மிக முக்கியமான தீர்மானங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

இந்த தீர்மானங்களில் பெரும்பாலானவர்கள் கவனத்தை ஈர்த்துள்ள தீர்மானங்கள் என்றால் அது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. அதேபோல் தொகுதி மறுவரையை எதிர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. இதுமட்டும் இல்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான போயஸ் கார்டன் வீட்டினை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதை எதிர்த்து தனித் தீர்மானம்:

இந்த திட்டம் அதிகார பரவலுக்கு எதிரானது எனவும், மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும் கூறி இந்த தீர்மானத்தை நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்த்து தனித் தீர்மானம்:

மக்கள் தொகையின் அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவருகின்றார்.