செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏரி காத்த ராமர் கோவிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை புரிந்து தூய்மை பணிகளை மேற்கொண்டார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது : பிரதமர் மோடி நாளை அயோத்தியில், கிட்டத்தட்ட 550 ஆண்டு காலம் போராட்டத்திற்கு பிறகு சுமூகமாக எந்தவித கேள்விக்குறி இல்லாமல், சர்ச்சை இல்லாமல் கலவரம் இல்லாமல் அமைதியாக, நீதிமன்றம் மூலம் ஆணை பெற்று, அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

நாட்டில் உள்ள பலதரப்பட்ட ஊர்களில் இருந்து , வரி பணம் இல்லாமல் சட்ட ரீதியாக தனி அறக்கட்டளை மூலமாக, சோமநாத் கோவில் போல பொதுமக்களின் நிதி உதவியின் அடிப்படையில் புனரமைக்கப்பட்டதோ, அதேபோல் பொதுமக்களால் கொடுக்கப்பட்ட நிதி உதவிகள் மூலமாக, உத்தரபிரதேச அரசோ மத்திய அரசு மூலமாக எந்த உதவிகளும் பெறாமல் , அறக்கட்டளை மூலமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், எந்தவித தலைமையும் இல்லாமல் , மக்களே பங்கேற்று , தங்களை இதில் சேர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

எப்படி சபரிமலைக்கு செல்லும்பொழுது விரதம் இருப்பார்களோ. அதேபோன்று 11 நாட்களாக இந்த கோவில்களுக்காக செல்வதற்கு முன்பாக ராமர் எங்கெங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் சென்று பல்வேறு கோவில்களில் வேண்டிக்கொண்டு நாளை ராமர் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த சமயத்தில் பிரதமர் ஒரு கோரிக்கை வைத்தார் அனைத்து கோவில்களும் சுத்தம் செய்ய வேண்டும். கோவிலை சுத்தம் செய்வதில் அனைவரும் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார் அதன் அடிப்படையில் இன்று மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலில், நான் இன்று சுத்தம் செய்தேன். 1756 பொழுது பிரிட்டிஷ் அதிகாரி முன்பு ராமரே மின்னல் ரூபத்தில் வந்து அந்த ஏரியை காப்பாற்றினார் என்பது நம்பிக்கை. அந்த பிரிட்டிஷ் அதிகாரிக்கு அதன் நினைவாக ஒரு கோவில் கட்டுமானத்தையும் கட்டி வைத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக 22ஆம் தேதி பிரதமர் அயோதியில் செய்யக்கூடிய காரியம். நம்ம நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டில் இருப்பவர்கள் கூட கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி. மக்களே அவர்கள் ஊரில் இருக்கும் கோவிலுக்கு சென்று, ராம நாம சங்கீதம் என கூறுவார்கள் பஜனை என கூறுவார்கள் அவற்றைப் பாடி அங்கிருக்கும் கோவிலிலிருந்து, அயோதியில் நடக்கும் காட்சியை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு கொண்டு நிறைய முயற்சி மக்கள் தானாக முன்னெடுத்தார்கள்.

நேற்று இரவில் இருந்து எனக்கு கிடைக்கக்கூடிய செய்தி, கட்சிக்காரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும், நிறைய பேர் என்னிடம் எங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. முறையாக அனுமதி கடிதம் கொடுத்த பிறகும், அதற்கு அனுமதி கொடுக்க கொடுக்கவில்லை. மாறாக நாங்கள் அதற்கான பணிகளை மேற்கொள்ள செல்லும்பொழுது காவல்துறையை வைத்து மிரட்டுகிறார்கள் என தெரிவித்தனர்.

தாராளமாக அவர்கள் வேண்டுமென்றால் சொல்லலாம். பொய் கூறி விட்டார்கள் வதந்தி கூறி விட்டார்கள் என அவர்கள் சொல்லலாம். பொறுப்புள்ள பதிவில் இருக்கக்கூடிய மத்திய அமைச்சர் இப்படி சொல்லலாமா என கூறுவார்கள். நான் அவ்வளவு சீக்கிரமாக இது போன்ற விஷயத்தில் தலையிட மாட்டேன். நேற்று இரவு 12 மணி அளவில், அம்மா என்னை இதை பண்ணவிடவில்லை எனத் தொடர்ந்து பல்வேறு அழைப்புகள் வந்தன. கட்சிக்காரருக்கு மட்டுமில்லாமல் பொதுமக்களும் தெரிவித்தனர்

ஏன் நான் காஞ்சிபுரத்தில் என்னுடைய நிகழ்ச்சியை மாநில அரசுக்கு அனுப்பி விட்டு, எந்த மணி நேரத்தில் எங்கெல்லாம் செல்ல போகிறேன் என ப்ரோக்ராம் ஸ்செடுலே காஞ்சிபுரத்திற்கும் கொடுத்து அனுப்பினேன். ஆனால் நான் கலந்து கொள்ள வேண்டிய, நிகழ்ச்சியில் கூட டிவியை வைத்து பிரதமர் நடத்தக்கூடிய அயோத்திய ராமர் கோவில் விழாவை, அங்கு பார்க்க கூடாது என ஒரு உதவி ஆய்வாளர் அங்கிருந்து விரட்டி அனுப்பினார்கள். நிர்வாகிகள் சிலர் எனக்கு இது குறித்து போன் செய்து கூறினார்கள். இரவு வரை அந்த குறிப்பிட்ட உதவி ஆய்வாளர் அங்கிருந்து போகவே இல்லை.

மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை காவல் அதிகாரிகளிடமிருந்து நிர்வாகிகள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இதை நிராகரிக்கவில்லையே வேண்டுமென்றால் நீங்கள் பண்ணிக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்கள். அமைச்சர் சேகர்பாபு போட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு கீழே சென்று பாருங்கள். மக்கள் நிராகரித்து தனக்கு லெட்டர் வந்துள்ளதாக, பலர் பதிவு செய்துள்ளார் நான் வதந்தியை பரப்பவில்லை என தெரிவித்தார்.

இந்து அறநிலையத்துறை, இந்து மக்கள் செய்யும் பூஜைக்கு உதவியாக இருக்க வேண்டுமா அல்லது அதற்கு எதிர்மறையாக போக வேண்டுமா ?. அறநிலை துறை அமைச்சர் இந்து மக்களுக்கு ஏதுவாக ஒத்துழைக்க வேண்டுமே தவிர, இந்த மாதிரி காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு மறுத்தேனா என பேசுவது சரியா. கடைசி வரை அவர்கள் ஏற்கவும் மாட்டார்கள் நிராகரிக்கவும் மாட்டார்கள்.

பல இடங்களில் காவல் துறையை வைத்துக்கொண்டு டிவி போடக்கூடாது. டிவி கொடுக்கும் சில தடை நடத்துபவர்களை கூட போலீசார் அவர்களை மிரட்டுகிறார்கள். யாரைக் கேட்டு கொடுக்கிறீர்கள் என போலீசார் அவர்களை மிரட்டுகிறார்கள்.
இந்துக்களுக்கு எதிரி பாஜக என உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் பேசி இருப்பது குறித்த செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில்,

”அவருக்கு நான் பதிலே கூறுவதில்லை அவர் ஆன்ட்டி இந்து. கிறிஸ்டினாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் அது தவறே கிடையாது. எந்த மதத்தை பின்பற்றலாம் அதை நினைத்து பெருமையாகவும் இருக்கலாம். எதிர் மதத்தை பற்றி தப்பாக பேசுவது எப்படி நியாயம் ?

இந்துவை திட்டுவதில் முன்னிலையில் இருக்கிறாரே தவிர. இந்துவும் அவருடைய வாக்காளர் என்பதை அவர் மறந்து விட்டார். நான் ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். சரித்திரத்தில் வரவேண்டிய நிகழ்ச்சி அயோத்தியில் நடக்கின்ற பொழுது, மனதில் வேதனையுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

”நீங்கள் நாத்திகம் பேசிக் கொள்ளுங்கள். இந்து எதிர்ப்பு என சொல்லிக் கொள்ளுங்கள் ஆனால் இந்துக்களுடைய தெய்வம் ராமர் மீது, செருப்பு மாலை போட்டு சுற்ற வைத்த ஊர்வலம் செய்த கும்பல். அவர்களிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” என தெரிவித்தார்.