போராட்ட களத்திற்கு முதலில் வருபவர் திருமா! பானை சின்னத்துக்கு வாக்கு கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்


போராட்ட களத்திற்கு முதலில் வருபவர் திருமா என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்,
முதலமைச்சர் ஸ்டாலின் கடலூரில் நடைபெற்று வரும் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, விசிக கட்சி தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது பேசிய அவர், போராட்ட களத்திற்கு முதலில் வருபவர் திருமா  என்றார்.
பாஜக மற்றும் பாமக கூட்டணியானது சந்தர்ப்பவாத கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்தார். 
மேலும் பேசுகையில், எரியுது மாலா என்னும் வடிவேலு வசனத்தை பேசி பாஜகவை விமர்சித்தார். இட ஒதுக்கீட்டால், சாதாரண மக்கள் உயர்ந்ததை பொறுக்க முடியவிலை என தெரிவித்தார். 

மேலும் காண

Source link