பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் 80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவிற்கு சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்வார்கள் என்பதால் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற உணவகங்களில் இதுவும் ஒன்று. இந்த உணவகத்தில் வெடித்தது வெடிபொருளா அல்லது சிலிண்டரா என என்.ஐ. ஏ சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் சித்தராமையா உறுதி செய்தார். இந்நிலையில் உணவக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் காண்போர் மனதில் படபடப்பை உருவாக்கும் அளவிற்கு உள்ளது.
இந்த வெடிகுண்டு மிகவும் வீரியம் கொண்ட IED ரக வெடிகுண்டு என வெடிகுண்டு பரிசோதனைக்குழு கூறியதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறினார். மேலும் அவர், வாடிக்கையாளர் போல வந்த ஒருவர்தான் பையை விட்டுச் சென்றுள்ளார். அந்த பையில் இருந்துதான் வெடிகுண்டு வெடித்துள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார்.
CCTV footage of Bangalore #RameshwaramCafe blast.Looks like much more serious than what was being told. pic.twitter.com/pARMOJJLK5
— Sanjeevee sadagopan (@sanjusadagopan) March 1, 2024
(வீடியோ நன்றி: ஊடகவியலாளர் சஞ்சீவி சடகோபன்)
மேலும் காண