பழனிசாமி எதிர்க்கட்சி  தலைவர் அல்ல, எதிரி கட்சித் தலைவர் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது இளம் பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டிவனத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவித்ததுடன், தமிழக அரசு சார்பில் 60 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதில் மருத்துவ உபகரணங்கள் அமைக்கும்  பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதனை இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்பொழுது துறை சார்ந்த அதிகாரிகளிடம் கட்டுமான பணிகள் குறித்தும் முடிவடையும் தருவாய் குறித்தும் கேட்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் அவர்களால் தமிழகத்தில் 25 புதிய மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டது ஏற்கனவே தமிழகத்தில் 19 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் இருந்தது, தலைமை மருத்துவமனைகளின் அவசியம் கருதி 19 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளும்  6 இடங்களில் தலைமை அரசு மருத்துவமனைக்கு இணையாகவும் 25 அரசு தலைமை மருத்துவமனை கொண்டுவர அறிவிப்பு வெளியிட்டு அதற்காக சுமார் 1100 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்தார்கள், தற்போது இந்த 25 அரசு தலைமை மருத்துவமனைகளுக்கான கட்டமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது, இதில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்காக 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் காத்திருப்புஅறை, நோயாளிகள் பிரிவு, எம்.ஆர்.எஸ் ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளும் அடங்கியுள்ளது, எனவே இந்த மருத்துவமனையில் அருகில் உள்ள கிராம மக்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று பயனடைய வேண்டும் என்ற நிலை மாறி அருகிலேயே அனைத்து சேவைகளையும் பெறலாம், 104 என்ற சேவை கடந்த காலங்களில் பெயரளவில் இருந்தது தற்போது அது தமிழக மக்களின் மருத்துவ சேவை மற்றும் மனநிலை சேவை ஆகியவற்றிற்கு மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது அது சம்பந்தமாக குறைகள் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  தமிழகம் முழுவதும் தற்போது 1021 மருத்துவர்கள் மற்றும் 983 மருந்தாளர்கள் இன்னும் சில சில தினங்களில் நியமனம் செய்ய உள்ளனர், மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள்  நிலுவையில் உள்ள வழக்குகள் முடிக்கப்பட்ட உடன்  1251 மருத்துவர்கள், 983 மருந்தாளர்கள், 1266 சுகாதார ஆய்வாளர்கள், 2242 கிராமப்புற செவிலியர்கள் நியமனம் செய்ய உள்ளதாகவும், விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் கருப்பையில் அடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்த போது இளம் பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வர் வெளிநாட்டுக்கு சென்றுள்ள பயணம் குறித்து விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி  தலைவர் அல்ல , அவர் எதிரி கட்சித் தலைவர் என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும்போது பல தடவை வெளி நாடுகளுக்கு சென்றுள்ளார். அப்பொழுதெல்லாம் அவர் கொள்ளையடித்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்வதற்காக சென்றுள்ளார் என்று கூறினால் சரியாக இருக்குமா ? என்று கேள்வி எழுப்பினார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Source link