நீங்க வேற லெவலுங்க! கேரள ரசிகர்கள் முன் ”லவ்லி ஸ்பீச்” கொடுத்த தளபதி விஜய்; வைரலாகும் வீடியோ!


நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகின்றது. இதற்காக கேரளா சென்ற நடிகர் விஜயை அவரது ரசிகர்கள் சுற்றி வளைத்து தங்களது அன்பை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. 
 

கேரளாவில் தளபதி அவர்கள் ரசிகர்கள் முன் உரையாற்றுகிறார் pic.twitter.com/pDkWrudNre
— ECR.P.Saravanan (@EcrPSaravanann) March 20, 2024

இந்நிலையில் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு வந்த  தனது ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய் மலையாளத்திலும் தமிழிலும் பேசினார். இது தொடர்பாக இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், “ எனது அன்பு சகோதர சகோதரிகளே, எனது அருமை தாய்மார்களே உங்கள் அனைவரையும் சந்தித்தது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஓணத்தின் போது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமே அதுபோல் இன்று என மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாருக்கும் கோடான கோடி நன்றிகள். தமிழ்நாட்டில் இருக்கும் எனது நண்பா நண்பிகள் போல் நீங்களும் வெற லெவலுங்க. மீண்டும் சொல்கின்றேன், உங்கள் அன்புக்கு கோடான கோடி நன்றிகள்” என பேசியுள்ளார். 

மேலும் காண

Source link