சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கு தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
மேலும் காண