சிற்பியாய் மாறிப்போன வேட்பாளர், அமைச்சர் – மாமல்லபுரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

மாமல்லபுரத்தில் திருவள்ளுவர் சிலையை செதுக்கி அமைச்சர் தா. மோ. அன்பரசன்  காஞ்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் உதயசூரியன் சின்னத்திற்கு  வாக்கு சேகரித்தார்.

மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேரம் குறைவாக இருப்பதால் வேட்பாளர்களை அனைத்து இடத்திற்கும் செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் தங்கள் பகுதிகளில் , வீடு தோரும் சென்று வாக்குகளை கேட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி

அந்த வகையில் , செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் செல்வம் மாமல்லபுரத்தில் இன்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . வாக்கு சேகரிப்பில் சிறு ,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் கலந்துகொண்டு மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வேன் பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். மாமல்லபுரம் சிற்பம் செதுக்கும்  சிற்பிகளை நேரில் சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு செல்வம் வாக்குகளை கேட்டார்.

திருவள்ளுவர் சிலை செதுக்கி

அப்பொழுது திருவள்ளுவர் சிலை செதுக்கி சிலை செதுக்கும் சிற்பிகளிடம் வாக்கு சேகரித்தார். அமைச்சர்  அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு   25 கிலோ எடை கொண்ட கருங்கலலான சிங்கம் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.  இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட பொருளாளர் மாமல்லபுரம் விஸ்வநாதன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, மதிமுக பொதுச்செயலாளர் மலை சத்யா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து பிரச்சாரம் செய்வதற்கு குறுகிய   நாட்கள் மட்டுமே  பிரச்சாரத்திற்கு நேரம் இருப்பதால்,  தினமும் வேட்பாளர்கள்  50க்கும் மேற்பட்ட இடங்களில் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.  காலையிலேயே துவங்கப்படும் பிரச்சாரம் இரவு வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  பல்வேறு இடங்களில் 5 நிமிடத்திற்கு குறைவாகவே  , பிரச்சாரத்தை வேக வேகமாக முடித்துக் கொண்டு செல்லக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.  இதனை கருத்தில் கொண்டு நிர்வாகிகளும்,  வேட்பாளர் இல்லாமல் தனியே பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் யாருடைய கோட்டை ?

செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2019 தேர்தல் நிலவரம் எப்படி ?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர் வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

Source link