சந்திரபாபு நாயுடுக்கு என்னாச்சு? வழிதவறி சென்ற ஹெலிகாப்டர்.. ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர பிரதேசத்தில் தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நடந்து வருகிறது. மாநில முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி வகித்து வருகிறார். இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனுடன், ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பயணித்த ஹெலிகாப்டர் வழிதவறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து அல்லூரி சீதாராமன் ராஜூ மாவட்டத்தில் உள்ள அரக்கு-க்கு சென்றுள்ளார் சந்திரபாபு நாயுடு. அப்போது, அவரின் ஹெலிகாப்டர் வழிதவறி சென்றது.
ஹெலிகாப்டரின் விமானிக்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மீண்டும் சரியான பாதையில் ஹெலிகாப்டர் பயணத்தை தொடர்ந்துள்ளது.

Source link