Pakistan Cops Killed: பாகிஸ்தானில் பதற்றமான கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள, காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பாகிஸ்தான் காவலர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரா இஸ்மாயில் கான் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது, நள்ளிரவில் பஷ்டூன் போராளிகள் ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு உள்ளே சென்றும் தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டவர்களில் ஸ்வாபியின் எலைட் போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஆறு காவலர்களும் அடங்குவர். முந்தைய ஆண்டு பல நடைபெற்ற பல தாக்குதல்களை கருத்தில் கொண்டு, தேர்தல் பணிகளில் உள்ளூர் காவல்துறைக்கு ஆதரவாக அப்பகுதியில்எலைட் போலீஸ் பிரிவு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.
10 Policemen killed in KPK, Pakistan 🇵🇰In an attack just before morning prayers, unknown militants fired sniper shots before entering the Chaudhvan police station and firing indiscriminately on the police personnel deployed.Six cops from Swabi’s Elite police unit were among… pic.twitter.com/zJav6kfnhQ
— THE SQUADRON (@THE_SQUADR0N) February 5, 2024
பாகிஸ்தானில் வரும் 8ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது கவனிக்க வேண்டியது. கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தானின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள், தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண