//// | ‘காதலெனும் தேர்வெழுதி’ காதலிக்காக

Punjab: பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்காக அவரைப் போன்று உடையணிந்து தேர்வு எழுதச்சென்று பிடிப்பட்டுள்ளார். 
உண்மையாக காதலிப்பவர்கள் தனது காதலிக்காகவும், காதலனுக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று பலரும் கூறுவர். இருப்பினும், இந்த காலத்தில் அப்படி செய்வது அரிவது என்றும் பலரும் கூறுவார்கள். சில நேரங்களில் காதலுக்காகவும், காதலிப்பவர்களுக்காகவும் சில விபரீதமான செயல்களையும் சிலர் செய்வார்கள். ஆனால், அப்படி பேசுபவர்களை வாய் அடைக்க செய்தது ஒரு இளைஞரின் செயல். 
காதலிக்காக தேர்வு எழுதி சென்ற இளைஞர்:
பஞ்சாப் மாநிலம் கோட்காபூரா பகுதியைச் சேர்ந்தவர் பெண் பரம்ஜித் கௌர் (26). பட்டப்படிப்பை முடிந்த இவர், அரசு பணிகளுக்காக தேர்வு எழுதி வருகிறார்.  ஆனால், இவர் எழுதிய தேர்வில் எதிலும்  இவர் தேர்ச்சி பெற்றதில்லை.  
இதுகுறித்து தனது காதலான அன்கிரீஸ் சிங்கிடமும் பலமுறை கூறி வருத்தப்பட்டு உள்ளார்.  இந்த மன வருத்தத்தை போக்க தான் உனக்கு பதிலாக நான் தேர்வு எழுதுகிறேன் என்று காதலன் அன்கிரீஸ் சிங் (31) கூறியிருக்கிறார். இதனை அடுத்து, சுகாதார பணியாளர்கள்  தேர்வுக்காக 2 மாதங்களாக தீவிரமாக படித்து வந்தார் அன்கிரீஸ் சிங்.
அன்கிரீஸ் சிங் தனக்காக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிடுவான் என்ற தையரியத்தில் பெண் பரம்ஜித் கௌரும் இருந்து வந்துள்ளார்.
காட்டிக் கொடுத்த பயோமெட்ரிக்:
இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி டிஏவி பள்ளியில் அரசு தேர்வு நடைபெற்றது. அப்போது, சுடிதார், லிப்ஸ்டிக், ஒட்டுமுடி, பொட்டு, கண்மை என தன்னை ஒரு பெண் போலவே மாற்றிக் கொண்டு  தேர்வு மையத்துக்கு சென்றார் அன்கிரீஸ் சிங். மேலும், தனது நடை மற்றும் முக பாவனைகளை பெண் போலவே மாற்றிக் கொண்டார்.
அவரை பார்த்து யாருக்கும் துளியும் சந்தேகம் ஏற்படவில்லை. அந்த அளவுக்கு தன்னை ஒரு பெண் போல் காட்டினார். பின்னர், அனைவரையும் சோதனையிட்ட அதிகாரிகள் செய்த போது, அவர் கொண்டு வந்திருந்த ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையில் புகைப்படங்கள் வித்தியாசமாக இருந்தன. தனது ஒரிஜினல் புகைப்படத்தில் இருந்த மீசையை போட்டோஷாப் கொண்டு மறைத்து தலை முடியையும் வளர்த்து வைத்திருந்தார்.
இதை பார்த்த சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பயோ மெட்ரிக் கருவி மூலம் அவரது விரலை அதில் வைக்க செய்தனர். அப்போது, அன்கிரீஸ் சிங்கின் பெண் போல வேடமிட்டு வந்திருப்பது தெரியவந்தது.  இதனை அடுத்து, அதிகாரிகள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் பரம்ஜித் கௌரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
Crime: 2 பட்டியலின சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! மீட்கப்பட்ட ஒருவரின் சடலம் – பீகாரில் என்ன நடந்தது?
Ayodhya Ram Temple: சடங்குகளுடன் தொடங்கியது அயோத்தி ராமர் கோயிலில் பூஜை! எந்தெந்த நாளில் என்னென்ன வழிபாடு?

Source link