கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசி மாவு, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அருள்மிகு ஸ்ரீ உன்மத்த வாராஹி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, சுவாமிக்கு உதிரிப்பூக்களால் ஆலயத்தில் சிவாச்சாரியார் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ உன்மத்த வாராஹி அம்மனுக்கு பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து ஓம் சக்தி, பராசக்தி கோசத்துடன் சுவாமியை மனதார வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய சிவாச்சாரியார் மற்றும் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்.

பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு வாராகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வரும் நிலையில் கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வாராஹி அம்மனுக்கு உதிரிப்பூக்களால் ஆலயத்தில் சிவாச்சாரியார் நாமாவளிகள் கூறினார்.

அதை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க வாராகி அம்மனுக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.