கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு அருகே உள்ள ஜீமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தினால் குடோனில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி வருகின்றது. இதனால் குடோனைச் சுற்றியும் குடோனுக்கு மேலேயும் பல மீட்டர்கள் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்துவருகின்றனர். குடோனுக்குள் ஆட்கள் யாரேனும் உள்ளார்களா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. முதற்கட்ட விசாரணையில் தீவிபத்துக்குள்ளான குடோன் வடிவேலு என்பவருக்குச் சொந்தமானது என தெரிவந்துள்ளது.