விழுப்புரம் : தனது உடன்பிறவா தம்பியும் குடும்ப உறுப்பினராக இருந்த புகழேந்தி நான் அழைக்கும் போதெல்லாம் ஓடோடி வந்தவரை இழந்தது மிகப்பெரிய துயரத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் பொன்முடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்த 71 வயதான புகழேந்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பிற்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர். சிகிச்சை பெற்று நேற்றைய முன்தினம் வீடு திரும்பினார்.

இந்நிலையில் நேற்றைய தினம் விக்கிரவாண்டி வி. சாலையில் விழுப்புரம் தொகுதி பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள விக்கிரவாண்டி எம் எல் ஏ புகழேந்தி பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கு வந்தபோது ரத்த வாந்தி எடுத்து மயக்கமடைந்தார். இதனையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த புகழேந்தி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்ததையடுத்து அவரது உடலுக்கு அமைச்சர் பொன்முடி, கெளதமசிகாமணி, திமுக எம் எல் ஏ லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து புகழேந்தியின் உடல் அஞ்சலிக்காக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அஞ்சலி செலுத்திய பின் பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி தனது உடன்பிறாவா தம்பியான புகழேந்தி உயிரிழந்தது கட்சிக்கு மட்டுமல்ல எனது குடும்பத்தில் ஒருவராக இருந்த அவர் உயிரிழந்து இருப்பது மிகப்பெரிய துயரத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. எப்பொழுதும் அண்ணா அண்ணா என்று நான் அழைக்கும் போதெல்லாம் ஓடோடி வந்தவர். கிளைக்கழக செயலாளராகவும் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், மாவட்ட அவைத்தலைவர் மாவட்ட செயலாளர் என கழகத்தில் படிப்படியாக வளர்ந்தவர் உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்துள்ளது தமிழக முதல்வருக்கும் கழகத்திற்கும் ஈடு செய்யமுடியாத இழப்பாக அமைந்ந்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்வியுற்றாலும் தோல்வி கண்டு துயலாதவராகவும் கழகத்தினரை தன்குடும்பமாக நினைத்து அன்பாக பழககூடியவர் இழந்திருப்பது பெரும்துயரத்தை ஏற்படுத்தியுள்ளதால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். புகழேந்தியின் உடல் அவரது சொந்த கிராமமான அத்தியூர் திருவாதியில் நாளை மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். கலைஞர் அறிவாலயத்தில் புகழேந்தியின் உடல் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி கெளதமசிகாமணி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.