அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கரூர் அருகே பெருமாள் கோவிலில் ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், அன்னதான விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அனுமதி இல்லை என காவல்துறையினர் தடுத்து நிறுத்தி நோட்டீஸ், பிளக்ஸ் பேனர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவகுளம் பகுதியில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடேச பெருமாள் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஊர் பொதுமக்கள் சார்பில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 மணி முதல் சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து 12 மணிக்கு மேல் சுமார் 1500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என பிளக்ஸ் பேனர் அடித்து கோவில் முன்பாக வைத்திருந்தனர்.

மேலும், அன்னதானத்திற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது மாயனூர் காவல்துறையினர் இரண்டு பேர் வந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் அன்று சிறப்பு அபிஷேகம், அன்னதானத்திற்கு அனுமதி கிடையாது, அரசு மேலிடத்திலிருந்து வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் பிளக்ஸ் பேனர்களை அகற்றவும், அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை செய்யக்கூடாது என தடுத்து நிறுத்தி அனுமதி இல்லை என நோட்டீஸ் கொடுத்து அறிவுறுத்தியுள்ளனர்.

ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் ஒன்று கூடி வாக்குவாதம் செய்துள்ளனர். சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஊர் பொதுமக்கள், கண்டிப்பாக சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடைபெறும் என தெரிவித்து தற்போது அன்னதானத்திற்கான வேலைகளை செய்து வருகின்றனர்.