பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அயோத்தி ராமர் கோயிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்தார். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் நாளே பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் கோயிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

ராமர் கோயிலுக்குள் புகுந்த குரங்கு:

இந்த நிலையில், கட்டப்பட்டு வரும் கோயிலுக்கு உள்ளே குரங்கு ஒன்று நேற்று புகுந்துள்ளது. மாலை 5:50 மணி அளவில், பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் கோயிலின் கருவறைக்கு உள்ள தெற்கு வாசல் வழியே குரங்கு நுழைந்துள்ளது. பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையை நோக்கி குரங்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோயிலுக்கு உள்ளே குரங்கு நுழைந்ததை பார்த்து அங்கு பணியமர்த்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, சிலையை சேதப்படுத்துவிடுமோ என்று பயந்து குரங்கை நோக்கி அவர்கள் விரைந்தனர். இதற்கிடையில், கருவறை வழியாக வடக்கு வாசலை நோக்கி குரங்கு நகர்ந்தது.

அங்கு கதவுகள் மூடப்பட்டிருந்ததை பார்த்தவுடன் குரங்கு கிழக்கு நோக்கி நகர்ந்தது. அங்குதான், பக்தர்கள் அனைவரும் கூடியிருந்தனர். கோயிலில் குரங்கு பார்த்து, பக்தர்கள் அனைவரும் வியப்படைந்தனர்.

பக்தி பரவசத்தில் திளைக்கும் பக்தர்கள்:

இதுகுறித்து ராமர் கோயில் அறக்கட்டளை வெளியிட்ட தகவலில், "மாலை 5:50 மணியளவில் தெற்கு வாசல் வழியாக கருவறைக்குள் நுழைந்த குரங்கு உற்சவர் சிலை நோக்கி சென்றது. இதைப் பார்த்த பாதுகாப்புப் பணியாளர்கள், உற்சவர் சிலையை குரங்கு தரையில் தள்ளிவிடுமோ என்று நினைத்து குரங்கை நோக்கி ஓடினர்.

ஆனால், போலீசார் குரங்கை நோக்கி ஓடியதும் குரங்கு வடக்கு வாசலை நோக்கி ஓடியது. கேட் மூடப்பட்டதால், கிழக்கு நோக்கி நகர்ந்து, கூட்டத்தை கடந்து, யாருக்கும் சிரமம் ஏற்படுத்தாமல், கிழக்கு வாசல் வழியாக வெளியே சென்றது. குழந்தை ராமர் சிலையை பார்க்க ஹனுமான் ஜியே வந்ததைப் போல எங்களுக்கு இருக்கிறது என்று பாதுகாப்புப் பணியாளர்கள் கூறுகிறார்கள்" என்றார்.

आज श्री रामजन्मभूमि मंदिर में हुई एक सुंदर घटना का वर्णन:

आज सायंकाल लगभग 5:50 बजे एक बंदर दक्षिणी द्वार से गूढ़ मंडप से होते हुए गर्भगृह में प्रवेश करके उत्सव मूर्ति के
पास तक पहुंचा। बाहर तैनात सुरक्षाकर्मियों ने देखा, वे बन्दर की ओर यह सोच कर भागे कि कहीं यह बन्दर उत्सव…

— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) January 23, 2024

அயோத்தி கோயிலுக்கு ராமரை பார்க்க அனுமனே வந்ததாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் திளைக்கின்றனர்.