Balakot Airstrike: நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 89 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி?
தேர்தல் நடந்து வரும் நிலையில், முன்னாள் இந்திய விமான படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதௌரியா பாலகோட் தாக்குதல் குறித்து பேசியுள்ளார். பாகிஸ்தான் விமானப்படையை உடைத்து பாலகோட் தாக்குதல் மேற்கொண்டதாக கூறியுள்ளார்.
பாஜகவில் சமீபத்தில் இணைந்த அவர், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து பேசுகையில், “பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்ததும், பயங்கரவாதத்திற்கு எதிரான சகிப்புத்தன்மை இல்லாத தெளிவான கொள்கையை பிரதமர் மோடி அறிவித்தார்.
ஒரு பயங்கரவாத சம்பவம் நிகழ்கிறது. எல்லைக்கு அப்பால் சென்று குற்றவாளிகள் மறைந்து கொண்டபோது, இந்திய பாகிஸ்தான் எல்லை முழுவதும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. புல்வாமா தாக்குதல் நடந்தபோது, எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் பதுங்கு குழியில் சென்று மறைந்து கொண்டனர். அவர்களை தேடி கண்டுபிடித்தோம். அப்போதுதான், பாலகோட் தாக்குதல் நடத்தப்பட்டது.
பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி:
இது ஒரு முக்கியமான நடவடிக்கை. இதன்மூலம், வலுவான செய்தியை அனுப்பினோம். அதன் பிறகு இதுபோன்ற (பயங்கரவாத) சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இந்த (வான்வழித் தாக்குதல்) பாகிஸ்தானின் விமானப்படை மற்றும் ராணுவ பாதுகாப்பை உடைத்து நடத்தப்பட்டது.
எங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. இது ஒரு வெற்றிகரமான நடவடிக்கை. எந்தச் சூழலுக்கும் தயாராக இருந்தோம். நம் நாட்டில் யாராவது பயங்கரவாதத்தை பரப்பினால், அவர்கள் எங்கு மறைந்தாலும் அவர்கள் குறிவைக்கப்படுவார்கள். அர்த்தம் தெளிவாக உள்ளது. பூஜ்ஜிய சகிப்புத்தன்மை. பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம்” என்றார்.
மேலும் காண